அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய ஹஸ்குவர்னா விட்பிலன் 401 மற்றும் ஹஸ்குவர்ணா ஸ்வார்ட்பிலன் 401 பைக்குகளை 2019 இஐசிஎம்ஏ மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர ஹஸ்க்வர்ணா நிறுவனத்தின் 901 நார்டென் கான்செப்ட் மாடலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பஜாஜின் கேடிஎம் நிறுவனத்தின் கீழ் செயல்படுகின்ற ஹஸ்குவர்ணா பைக் தயாரிப்பாளரின் மாடல்கள் தொடர்ந்து இந்தியாவில் வெளியிடுவது தாமதப்படுத்தி வரும் நிலையில் புதிய மாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக கேடிஎம் 390 டியூக், ஆர்சி 390 மற்றும் 390 அட்வென்ச்சர் மாடல்களில் பயன்படுத்தப்பட்டு வரும் 373சிசி என்ஜினை இந்த இரு மாடல்களும் பெற்றுள்ளது.
யூரோ 5 / பிஎஸ் 6 இணக்கமான என்ஜின் பொருத்தப்பட்டு 9,500 ஆர்பிஎம் சுழற்சியில் 43 பிஎஸ் அதிகபட்ச சக்தியையும், 7,250 ஆர்பிஎம் சுழற்சியில் 37 என்எம் டார்க்கையும் வழங்க வல்லதாகும். 6 வேக டிரான்ஸ்மிஷன் பெற உள்ளது. இந்த மாடல்கள் புனேவுக்கு அருகிலுள்ள பஜாஜின் சக்கான் ஆலையில் தயாரிக்கப்பட உள்ளது.
விட்பிலன் 401 மற்றும் ஸ்வார்ட்பிலன் 401 ஆகியவை அடிச்சட்டம், சஸ்பென்ஷன், பிரேக் மற்றும் என்ஜின் விவரக்குறிப்புகளை ஒரே மாதிரியாக கொண்டுள்ளன. முழுமையா எல்இடி விளக்குகள், டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்றுள்ளன. இரண்டு மோட்டார் சைக்கிள்களும் அந்தந்த ஸ்டைலிங் மூலம் வேறுபடுகின்றன. குறிப்பாக கஃபே ரேசர் ஸ்டைலை விட்பிலன் 401 மாடலும், ஸ்கிராம்பளர் ஸ்டைலை ஸ்வார்ட்பிலன் 401 பைக் பெறுவதுடன் ஆஃப் ரோடு பயணத்திற்கு ஏற்ற அம்சங்களை பெறுகின்றது.
பாஷ் 9 எம்பி இரட்டை சேனல் ஏபிஎஸ் கொண்டு முன்புறத்தில் 320 மிமீ டிஸ்குடன் நான்கு பிஸ்டன் ரேடியல் ஃபிக்ஸட் காலிப்பரும், 230 மிமீ டிஸ்க் பின்புறத்தில் ஒற்றை பிஸ்டன் மிதக்கும் காலிப்பருடன் கொண்டுள்ளது.
இந்தியாவில் அடுத்த ஆண்டு வெளியாக உள்ள ஹஸ்குவர்னா விட்பிலன் 401 மற்றும் ஹஸ்குவர்ணா ஸ்வார்ட்பிலன் 401 பைக்குகளின் விலை ரூ.3 லட்சத்திற்குள் அமையலாம்.