இந்தியா கவாஸாகி மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள புதிய பிஎஸ் 6 நின்ஜா 650 மாடல் ரூ.6.24 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய 2019 மாடலை விட தற்போது வந்துள்ள புதிய பைக் ரூ.35,000 வரை மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ளது.
முன்பாக விற்பனையில் இருந்த பிஎஸ்-4 இன்ஜினை விட பவரில் எந்த மாற்றங்களும் இல்லை. ஆனால் டார்க் கனிசமாக குறைந்துள்ளது. புதிய 649 சிசி பேரலல் ட்வீன் இன்ஜின் அதிகபட்சமாக 68 ஹெச்பி பவர் மற்றும் 64 என்எம் டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. முன்பாக இந்த என்ஜின் 65.7 என்எம் டார்க் வெளிப்படுத்தியது.
2020 நின்ஜா 650 மாடல் 4.3 அங்குல TFT ப்ளூடுத் கனெக்ட்டிவிட்டி ஆதரவினை பெற்ற டிஜிட்டல் கிளஸ்ட்டர், ஸ்மார்ட்போன் ஆதரவினை வழங்கும் வசதிகளை கொண்டுள்ளது. தோற்ற அமைப்பினை பொறுத்தவரை முன்புறத்தில் வழங்கப்பட்டுள்ள முகப்பு தோற்றம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.