பிஎஸ் 6 இன்ஜின் பெற்ற புதிய ட்ரையம்ப் ஸ்டீரிட் டிரிப்ள் ஆர்எஸ் பைக்கின் விலை ரூ.11.13 லட்சம் ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்த மாடல் இப்போது விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு துவங்கப்படுகின்றது. டெஸ்ட் டிரைவ் மற்றும் விநியோகம் ஊரடங்கு உத்தரவு தளர்வுக்குப் பிறகு கிடைக்க துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் சிறப்பான பெர்ஃபாமென்ஸை வழங்கவல்ல நடுத்தர ஸ்போர்ட்டிவ் மோட்டார் சைக்கிள் மாடலான 2020 ஸ்டீரிட் டிரிப்ள் ஆர்எஸ் முந்தைய மாடலை விட 9 சதவிதம் கூடுதல் பவர் மற்றும் டார்க் வழங்குகின்றது. இதில் பொருத்தப்பட்டுள்ள 765 சிசி இன்லைன் மூன்று சிலிண்டர் இன்ஜின் அதிகபட்சமாக 121 HP பவரை 11,750 RPM-லும், 79 Nm டார்க் வழங்க 9350 RPM எடுத்துக் கொள்ளுகின்றது. இந்த மாடலில் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உடன் கூடிய 6 வேக கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
முன்பாக விற்பனை செய்யப்பட்ட மாடலை விட ஸ்டைலிங் சார்ந்த அம்சங்களில் சிறிய அளவிலான மேம்பாடுகள், கலர் டிஎஃப்டி திரை, ப்ளூடுத் ஆதரவு மற்றும் பிரத்தியேக கோ புரோ கேமரா, டர்ன் பை டர்ன் நேவிகேஷன் போன்றவை இணைக்கப்பட்டுள்ளது.
எல்இடி ஹெட்லைட் பெற்றுள்ள ட்ரையம்ப் ஸ்டீரிட் டிரிப்ள் ஆர்எஸ் பைக்கில் முழுமையாக அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுகின்ற 41 மிமீ ஷோவா இன்வெர்டேட் ஃபோர்க், பின்புறத்தில் Öhlins piggyback ஷாக் அப்சார்பர் இடம் பெற்றுள்ளது.