இந்தியாவில் புதுப்பிக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டிற்கான ட்ரையம்ப ஸ்டீரிட் டிரிபிள் 765 பைக்கின் R மற்றும் RS என இரண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்ட்ரீட் டிரிபிள் 765 ஆர் விலை ரூ. 10.16 லட்சம் முதல் ரூ. 12.07 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை கிடைக்கின்றது.
அடுத்தப்படியாக, புதிய ஸ்ட்ரீட் டிரிபிள் 765 ஆர்எஸ் விலை ரூ. 11.81 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக துவங்குகின்றது. நேக்டூ ஸ்போர்ட்டிவ் பைக்குகளில் 765 RS மாடல் சிறப்பபான ரேஸ் அனுபவத்தினை வழங்கும் மாடலாக விளங்குகின்றது.
2023 Triumph Street Triple 765 range
மோட்டோ 2 பந்தய களத்திற்கு அனுப்படும் என்ஜினை கொண்டு பவரை மேம்படுத்தியுள்ளது. லிக்யூடு கூல்டு, 765cc, மூன்று சிலிண்டர் எஞ்சின் ஆனது R மற்றும் RS என இரண்டிற்கும் மாறுபட்ட பவரை வழங்குகின்றது.
RS மாடல் எஞ்சின் 128 bhp பவரை 12,000 rpm-ல் மற்றும் டார்க் 80 Nm 9,500 rpm-ல் வருகிறது. அடுத்து குறைந்த விலை R மாடல் 11,500 rpm-ல் 118 bhp பவர் மற்றும் டார்க் 80Nm வழங்குகின்றது. இதில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் பை ட்ரைக்ஷனல் விரைவு-ஷிஃப்ட்டர் உள்ளது.
ஐகானிக் பக்-ஐ எல்இடி ஹெட்லேம்ப் ஆனது முன்பை விட புதியதாக உள்ளது. மேலும், இது நிலையான ட்வின் எல்இடி ஹெட்லைட் மற்றும் புதிய வண்ண-குறியிடப்பட்ட பில்லியன் சீட் கவுல் மற்றும் மாற்றக்கூடிய பில்லியன் இருக்கை ஆகியவற்றைப் பெறுகிறது.
ட்ரையம்ப் ஸ்ட்ரீட் டிரிபிள் ஆர் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது: சில்வர் ஐஸ் வித் ஸ்டார்ம் கிரே மற்றும் யெல்லோ கிராபிக்ஸ் மற்றும் கிரிஸ்டல் ஒயிட் உடன் ஸ்ட்ரோம் கிரே மற்றும் லித்தியம் ஃப்ளேம் கிராபிக்ஸ் ஆகும்.
ஸ்ட்ரீட் டிரிபிள் ஆர்எஸ் மூன்று பெயிண்ட் நிறங்களை பெற்றுள்ளது: பாஜா ஆரஞ்சு மற்றும் ஸ்டார்ம் கிரே கிராபிக்ஸ் கொண்ட சில்வர் ஐஸ், கார்பன் பிளாக் மற்றும் அலுமினியம் சில்வர் கிராபிக்ஸ் கொண்ட கார்னிவல் ரெட் மற்றும் கார்பன் பிளாக் மற்றும் அலுமினியம் சில்வர் கிராபிக்ஸ் கொண்ட காஸ்மிக் மஞ்சள் ஆகும்.
வரும் ஜூன் 27 ட்ரையம்ப் மற்றும் பஜாஜ் கூட்டணியில் முதல் பைக் அறிமுகம் செய்யப்பட உள்ளது.