ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பட்ஜெட் விலை பைக் மாடலாக விளங்கும் எச்எஃப் டீலக்ஸ் (HF Deluxe) பைக்கில் OBD-II மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்ற வகையிலான 97.2cc என்ஜின் கொண்டதாக விளங்குகின்றது.
தற்பொழுது ஹீரோ HF டீலக்ஸ் பைக்கில் கிரே நிறத்துடன் பச்சை, டெக்னோ ப்ளூ, கருப்பு நிறத்துடன் பர்பிள், கோல்டு, கிரே உடன் கருப்பு, கேண்டி பிளேசிங் சிவப்பு, கருப்பு உடன் சிவப்பு, நெக்சஸ் கருப்பு மற்றும் கேன்வாஸ் கருப்பு என மொத்தமாக 9 நிறங்களில் கிடைக்கின்றது.
எச்எஃப் டீலக்ஸ் பைக்கில் எந்த மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை. எச்எஃப் டீலக்ஸ் மாடலில் 97.2cc ஏர் கூல்டு, 4 ஸ்ட்ரோக், சிங்கிள் சிலிண்டர் OBD-II மற்றும் E20 இணக்கமான ‘XSens டெக்னாலஜி’ கொண்ட ப்ரோகிராம் செய்யப்பட்ட ஃப்யூயல் இன்ஜெக்ஷன் என்ஜின் ஆகும்.
அதிகபட்சமாக 8000 rpm-ல் 8.02 bhp பவரையும், 6000 rpm-ல் 8.05 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த என்ஜின் 4-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
Hero XSens ஆனது அதிக எரிபொருள் சேமிப்பு, நீண்ட என்ஜின் ஆயுள், நிலையான சவாரி, சிரமமற்ற ஆக்சிலிரேஷன் மற்றும் குறைந்தபட்ச பராமரிப்பு ஆகிய பல நன்மைகளை வழங்குகிறது.
2023 HF டீலக்ஸ் மாடலின் பரிமாணங்கள் 1965 மிமீ நீளம், 720 மிமீ அகலம் மற்றும் 1045 மிமீ உயரம் கொண்டது. இதன் வீல்பேஸ் 1,235 மிமீ ஆகவும், இருக்கை உயரம் 805 மிமீ. 165 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது. எச்எஃப் டீலக்ஸ் பைக்கில் 733 மிமீ நீள இருக்கை உள்ளது. இது பில்லியன் மற்றும் ஓட்டுபவர்களுக்கும், அதிக சரக்குகளை எடுத்துச் செல்வதற்கும் ஏற்றதாக அமைகிறது.
110-112 கிலோ கெர்ப் எடை கொண்டுள்ள பைக்கில் முன்புறத்தில் 2.75 x 18 – 4PR/42P மற்றும் பின்புறத்தில் 2.75 x 18 – 6PR/48P டயர் கொடுக்கப்பட்டு, இருபக்க டயர்களிலும் 130மிமீ டிரம் பிரேக் உடன் இன்ட்கிரேட்டேட் பிரேக்கிங் சிஸ்டம் ஆனது இடம்பெற்றுள்ளது.
2023 ஹீரோ HF டீல்க்ஸ் பைக்கில் ட்யூப்லெர் டபுள் கார்டிள் சேஸ் உடன் முன்புறத்தில் டெலஸ்கோபிக் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் மற்றும் பின்புறத்தில் 2-படி அட்ஜெஸ்டபிள் ஹைட்ராலிக் ஷாக் அப்சார் கொண்ட ஸ்விங்கார்ம் இடம்பெற்றுள்ளது.
HF DELUXE DRUM KICK CAST – ₹ 60858
HF DELUXE DRUM SELF CAST – ₹ 67208
HF DELUXE I3S DRUM SELF CAST – ₹ 68708
HF DELUXE GOLD BLACK – ₹ 67978
(All Prices Ex-Showroom Tamil Nadu)
97.2cc என்ஜின் 8000 rpm-ல் 8.02 bhp பவரையும், 6000 rpm-ல் 8.05 Nm டார்க் வெளிப்படுத்தும். 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
ஹீரோ எச்ஃஎப் டீலக்ஸ் பைக்கின் ஆன்-ரோடு விலை ₹ 73,100 முதல் ₹ 83,500 வரை கிடைக்கும்.
ஹீரோ எச்ஃஎப் டீலக்ஸ் மைலேஜ் 70 Kmpl வரை கிடைக்கும்.