ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் புதிய CB300F பைக் OBD2 மற்றும் E20 பெற்ற மாடலை ரூ.1.70 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஹோண்டாவின் பிக் விங் டீலர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றது.
முதன்முறையாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட பொழுது விலை ரூ.2.29 லட்சம் ஆரம்ப விலையாக இருந்தது.
2023 Honda CB300F
2023 ஹோண்டா CB300F பைக்கில் OBD2 மற்றும் E20 மேம்பாடு பெற்ற 293cc, ஆயில்-கூல்டு, 4-ஸ்ட்ரோக், சிங்கிள்-சிலிண்டர், PGM-Fi என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 24.5PS பவர் மற்றும் 25.6Nm டார்க் வழங்குகின்றது. இந்த என்ஜினில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் ஸ்லிப்பர் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.
முன்புறத்தில் USD ஃபோர்க்குகளையும் பின்புறத்தில் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் சஸ்பென்ஷனையும் பயன்படுத்துகிறது. இந்த மாடலின் முன்புறத்தில் 276 மிமீ டிஸ்க் மற்றும் 220 மிமீ டிஸ்க் கொண்டு இரட்டை சேனல் ஏபிஎஸ் மற்றும் ஹோண்டா செலக்டபிள் டார்க் கன்ட்ரோல் (HSTC) கொண்டதாக கிடைக்கிறது.
ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி வசதியுடன் ஹோண்டா குரல் கட்டுப்பாட்டு அமைப்பு (HSVCS) , ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், டேகோமீட்டர், ஃப்யூவல் கேஜ், ட்வின் ட்ரிப் மீட்டர்கள், கியர் பொசிஷன் இண்டிகேட்டர் மற்றும் கடிகாரம் போன்ற ஐந்து நிலைகளில் தனிப்பயனாக்கக்கூடிய வகையிலான டிஸ்பிளே கொண்ட முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் உள்ளது.
ஸ்போர்ட்ஸ் ரெட், மேட் மார்வெல் ப்ளூ மெட்டாலிக் மற்றும் மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் ஆகிய மூன்று நிறங்களை பெறுகின்றது.
2023 ஹோண்டா CB300F விலை ரூ.1.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)