ஹோண்டா மோட்டார்சைக்கிள் வெளியிட்டுள்ள புதிய டீசர் மூலம் 2023 ஹார்னெட் 3.0 பைக் மாடலாக இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. டீசரில் வேறு எவ்விதமான விபரமும் இல்லை. ஏற்கனவே, OBD2 மற்றும் E20 மேம்பாடு பெற்ற ஷைன் 125, டியோ மற்றும் யூனிகார்ன் பைக்குகள் விற்பனைக்கு வந்துள்ளது.
புதிதாக தனது சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள டீசர் மூலம் எந்த மாடல் பற்றியும் உறுதியாக தகவல் இல்லை.
ஹோண்டா டீசர்
ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்கில் உள்ள 184சிசி ஒற்றை சிலிண்டர் ஏர்கூல்டு PGM-FI HET (Honda Eco Technology) இன்ஜின் 8500 RPM சுழற்சியில் 17.03 ஹெச்பி பவர் மற்றும் 6000 RPM சுழற்சியில் 16.1 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
சஸ்பென்ஷன் அமைப்பினை பொறுத்தவரை முன்புறத்தில் வழங்கப்பட்டுள்ள கோல்டு ஃபினிஷ் செய்யப்பட்ட யூஎஸ்டி ஃபோர்க்கு கவர்ச்சிகரமாக விளங்குவதுடன், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் இணைக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களில் எந்த மாடல் என்ற தகவல் வெளிவரலாம்.