Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2023 ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்கின் முக்கிய அம்சங்கள்

by MR.Durai
17 June 2023, 2:10 am
in Bike News
0
ShareTweetSend

new unicorn 160 bike

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹோண்டா நிறுவனத்தின் யூனிகார்ன் 160 பைக்கின் விலை ₹ 1,08,400 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நடைமுறைக்கு வந்துள்ள பிஎஸ்6 இரண்டாம் கட்ட நடைமுறைக்கு இணங்க விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முந்தைய மாடலை விட ரூ.600 வரை விலை தமிழ்நாட்டில் குறைக்கப்பட்டுள்ள நிலையில் டெல்லி உட்பட பல்வேறு நகரங்களில் ரூ.4,500 வரை விலை உயர்வை யூனிகார்ன் சந்தித்துள்ளது.

2023 Honda Unicorn 160

ஹோண்டா தனது மாடல்களில் பெரிய அளவிலான மேம்பாடினை வழங்கவில்லை. குறிப்பாக முன்பை விட கூடுதலாக நீல நிறம் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. மற்றபடி, கிரே மெட்டாலிக் ,ரெட் மெட்டாலிக் மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கின்றது.

இப்பொழுது இந்த என்ஜின் OBD2 மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்றதாக HET (Honda Eco Technology) நுட்பத்தினை பெற்று 162.71cc என்ஜின் அதிகபட்சமாக 7,500rpm-ல் 12.73 bhp பவர், 14 NM டார்க் ஆனது 5500rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கபட்டுள்ளது.

இருக்கை நீளம் 715 மிமீ மற்றும் 13 லிட்டர் எரிபொருள் கொள்ளளவு பெற்று, 140 கிலோ எடை கொண்டது. முன்பக்கத்தில் 240 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பெற்றுள்ளது யூனிகார்ன் ஒற்றை சேனல் ஏபிஎஸ் கொண்டதாக மட்டும் வருகிறது.

unicorn rear

டைமன்ட் டைப் ஃபிரேம் கொண்டுள்ள யூனிகார்னில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனை பெற்றுள்ள மாடலின் நீளம் 2081 மிமீ, அகலம் 756 மிமீ மற்றும் உயரம் 1103 மிமீ கொண்டுள்ளது. இதன் வீல்பேஸ் 1335 மிமீ பெற்று 187 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்றதாக உள்ளது.

பொதுவாக தற்பொழுது விற்பனைக்கு வருகின்ற மாடல்களில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்று வரும் நிலையில், யூனிகார்ன் 160 பைக்கில் அனலாக் கிளஸ்ட்டர் மட்டும் வழங்கப்பட்டு வருகின்றது.

டீயூப்லெஸ் டயர் கொண்டுள்ள யூனிகார்ன் 160 பைக்கில் முன்புறத்தில் 80/100-18 M/C47P மற்றும் பின்புறத்தில் 100/90-18 M/C56P டயர் உள்ளது.

2023 ஹோண்டா யூனிகார்ன் 160 பைக் விலை ₹ 1,29,940 (on-Road Price in TamilNadu)

honda unicorn

2023 ஹோண்டா யூனிகார்ன் பவர் & டார்க் எவ்வளவு ?

யூனிகார்ன் பைக்கில் உள்ள 162.71cc என்ஜின் அதிகபட்சமாக 7,500rpm-ல் 12.73 bhp பவர், 14 NM டார்க் ஆனது 5500rpm-ல் வழங்குகின்றது.

2023 ஹோண்டா யூனிகார்ன் மைலேஜ் எவ்வளவு ?

புதிய யூனிகார்ன் 160 பைக்கின் மைலேஜ் சராரியாக 50Kmpl ஆகும்.

ஹோண்டா யூனிகார்ன் 160 போட்டியாளர்கள் யார் ?

யூனிகார்ன் 160 பைக்கிற்கு நேரடியான போட்டியாளர்கள் இல்லையென்றாலும் 160சிசி சந்தையில் உள்ள அனைத்தையும் எதிர்கொள்ளுகின்றது.

2023 honda unicorn bike

Related Motor News

ரூ.1.19 லட்சத்தில் 2025 ஹோண்டா யூனிகார்ன் 160 விற்பனைக்கு வெளியானது..!

ஹோண்டா 160cc பைக்குகளின் என்ஜின் விபரம், விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்

குறைந்த விலையில் கிடைக்கின்ற 6 ஏபிஎஸ் பைக்குகள்

ஹோண்டா SP160 vs போட்டியாளர்களின் ஆன்-ரோடு விலை, என்ஜின் ஒப்பீடு

விற்பனையில் டாப் 10 பைக்குகள் – ஜூன் 2023

2025 ஹோண்டா யூனிகார்ன் 160 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

Tags: Honda Unicorn
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

Hero Glamour X 125

புதிய ஹீரோ கிளாமர் X 125 எதிர்பார்ப்புகள் என்ன.!

ஓலா S1 Pro+ எலக்ட்ரிக் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள், சிறப்புகள்

விலை குறைப்பு., ஓலா S1 Pro +, ரோட்ஸ்டெர் X+ மாடல்களில் 4680 செல்கள் அறிமுகம்

5 லட்ச ரூபாய் ஓலா டைமண்ட்ஹெட் எலக்ட்ரிக் பைக் விவரங்கள்

320 கிமீ ரேஞ்சுடன் ஓலா S1 Pro ஸ்போர்ட் ADAS வசதியுடன் அறிமுகமானது

2025 யமஹா ரே ZR 125 Fi விற்பனைக்கு வெளியானது

ரூ.83,498 விலையில் 2025 யமஹா ஃபேசினோ 125 அறிமுகம்

ரூ.76,000 விலையில் BAAS மூலம் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டரை வாங்கலாம்.!

கேடிஎம் 160 டியூக் Vs யமஹா MT-15 V2 ஒப்பீடு., எந்த பைக் வாங்கலாம்.?

டிவிஎஸ் என்டார்க் 150 செப்டம்பர் 1ல் அறிமுகம்

ரூ.1.94 லட்சத்தில் 2026 கவாஸாகி KLX230, KLX230R S ஆஃப் ரோடு பிரியர்களுக்கு அறிமுகம்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan