Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2023 டிவிஎஸ் ஜூபிடர் 125 ப்ளூடூத் வசதியுடன் விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
17 October 2023, 1:14 pm
in Bike News
0
ShareTweetSend

tvs jupiter 125 smartxconnect

பிரசத்தி பெற்ற 125சிசி ஸ்கூட்டர் மாடலாக விளங்கும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் விலை ரூ.90,255 முதல் ரூ.99,905 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் வசதி கொண்டதாக சிவப்பு மற்றும் காப்பர் பிரான்ஸ் என இரு புதிய நிறங்களை கொண்டதாக வந்துள்ளது.

இந்தியாவில் கிடைக்கின்ற 125சிசி சந்தையில் உள்ள ஹோண்டா ஆக்டிவா 125, சுசூகி ஆக்செஸ் 125, டிவிஎஸ் என்டார்க் 125, ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 உள்ளிட்ட மாடல்களை ஜூபிடர் 125 ஸ்கூட்டர் எதிர்கொள்ளுகின்றது.

2023 TVS Jupiter 125

டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டர் மாடலில் 6,500rpm-ல் 8.04hp பவர் மற்றும் 4,500rpm-ல் 10.5Nm டார்க்கினை வழங்குகின்ற 124.8cc என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

கேஸ் நிரப்பப்பட்ட ஒற்றை ஷாக் அப்சார்பரை பின்புறத்தில் பெற்ற ஜூபிட்டரில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் வழங்கப்பட்டுள்ளது. இருக்கைக்கு அடியில் வழங்கப்பட்டுள்ள ஸ்டோரேஜ் வசதியை பொருத்தவரை இரண்டு ஹெல்மெட்களை வைக்கும் வகையில் 33 லிட்டர் கொள்ளளவு இடவசதி கொடுக்கப்பட்டுள்ளது.

Smartxonnect டாப் வேரியன்டில் அறிமுகப்படுத்தப்பட்டு முழு டிஜிட்டல் கன்சோல், வாய்ஸ் அசிஸ்ட், நேவிகேஷன் அசிஸ்ட் மற்றும் எஸ்எம்எஸ்/அழைப்பு எச்சரிக்கைகள் போன்ற புதிய அம்சங்களுடன் வருகிறது. ஜூபிடர் 125 Smartxonnect அமைப்பில் புளூடூத் வாயிலாக இயக்கப்பட்ட தொழில்நுட்பமாகும். இது TVS Connect மொபைல் செயலி வசதி Android மற்றும் iOS இயங்குதளங்களில் கிடைக்கிறது.

புளூடூத் ஹெட்ஃபோன்கள், வயர்டு ஹெட்ஃபோன்கள் அல்லது இணைக்கப்பட்ட மற்றும் புளூடூத் பொருத்தப்பட்ட ஹெல்மெட் போன்ற இணைக்கப்பட்ட சாதனத்தின் மூலம் வாய்ஸ் அசிஸ்ட் அம்சத்தைப் பயன்படுத்தலாம். ரைடருக்கு ஸ்பீடோமீட்டரில் அறியலாம்.

2023 tvs jupiter 125

2023 TVS Jupiter 125 Price list

  • Drum – Alloy ₹ 90 255
  • Disc ₹ 94 655
  • SmartXonnect ₹ 99 905

Related Motor News

2025 டிவிஎஸ் ஜூபிடர் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

2025 டிவிஎஸ் ஜூபிடர் 125 DT SXC விற்பனைக்கு வெளியானது

2025 ஜூபிடர் 125 அறிமுகத்தை உறுதி செய்த டிவிஎஸ் மோட்டார்

2023 டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் வேரியண்ட் வாரியான வசதிகள்

டிவிஎஸ் ஸ்கூட்டர்களின் ஆன்-ரோடு விலை பட்டியல்

Tags: TVS Jupiter 125
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

new yamaha xsr155

யமஹா XSR155 வாங்குவதற்கு முன் தெரிந்திருக்க வேண்டியவை.!

hero xtreme 160r 4v

க்ரூஸ் கண்ட்ரோலுடன் 2026 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V அறிமுகமானது

இந்தியாவில் யமஹா ஏரோக்ஸ் எலக்ட்ரிக் அறிமுகமானது

160கிமீ ரேஞ்சுடன் யமஹா EC-06 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியானது

₹ 1.17 லட்சத்தில் யமஹா FZ ரேவ் விற்பனைக்கு வெளியானது

ரூ.1.50 லட்சத்தில் யமஹா XSR155 இந்தியாவில் விற்பனைக்கு வெளியானது

பிஎம்டபிள்யூ F 450 GS அட்வென்ச்சர் அறிமுகமானது

100 கிமீ ரேஞ்சு வழங்கும் புதிய விடா VX2 Go 3.4kwh வேரியண்ட் அறிமுகமானது

ஹீரோ ஹங்க் 440SX இந்தியாவில் விற்பனைக்கு வருமா.?

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 டக்கார் எடிசன் விற்பனைக்கு எப்பொழுது.?

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan