Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

2023 யமஹா ஃபேசினோ, ரே ZR , ரே ZR ஸ்ட்ரீட் ரேலி விற்பனைக்கு வந்தது

by automobiletamilan
February 20, 2023
in பைக் செய்திகள்

இந்தியா யமஹா மோட்டார் (IYM) நிறுவனம் 125 CC ஸ்கூட்டர் சந்தையில் புதுப்பிக்கப்பட்ட ஃபேசினோ 125 Fi ஹைபிரிட், ரே ZR 125 Fi ஹைபிரிட் மற்றும் ரே ZR ஸ்ட்ரீட் ரேலி 125 Fi ஹைபிரிட்  என மூன்று மாடல்களையும் புதிய வசதிகளை கொண்டதாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

கார்பன் உமிழ்வைக் குறைக்கும் வகையில் இந்தியாவின் திட்டத்தை வலுப்படுத்தும் வகையில், யமஹாவின் 125 சிசி ஹைப்ரிட் ஸ்கூட்டர்களில் இப்போது E20 எரிபொருளுக்கு ஏற்ற என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய என்ஜின் OBD2 இணக்கமாக உள்ளது. இதனால் நிகழ்நேரத்தில் இன்ஜினின் ஆரோக்கியம் மற்றும் செயல்திறனை கண்காணிக்க உதவுகிறது.

2023 Yamaha Fascino & Ray ZR

புதிய அம்சங்களை பெற்றதாக விற்பனைக்கு வந்துள்ள 125 cc ஹைபிரிட் ஸ்கூட்டர் ரேஞ்ச் BS-VI OBD2 & E-20 எரிபொருளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு ஏர் கூல்டு FI என்ஜின் 8.2 PS பவரை 6,500 RPM-ல் மற்றும் 10.3 NM டார்க்  5,000 RPM-ல் வழங்குகின்றது. இந்த 125 Fi ஹைப்ரிட் ப்ளூ கோர் என்ஜின் சிறப்பான செயல்திறனை வழங்க ஹைபிரிட் இன்ஜினில் சத்தமில்லாமல் ஸ்டார்ட் செய்ய ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் (SMG – Smart Motor Generator ) சிஸ்டம் உள்ளது.

யமஹா நிறுவனம் குறிப்பிடுகின்ற ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் 125 Fi ஹைப்ரிட் எஞ்சின் “தானியங்கி ஸ்டாப் & ஸ்டார்ட் சிஸ்டம்” என்ஜின் மற்றும் லேசாக த்ரோட்டில் ட்விஸ்ட் செய்தால் என்ஜின் இயங்க தொடங்கும்,  மற்றும் இன்-பில்ட் சைட் ஸ்டாண்ட் எஞ்சின் கட்-ஆஃப் சுவிட்ச் சேர்க்கப்பட்டுள்ளது.

2023 Yamaha Fascino 125, Ray ZR 125 & Ray ZR Street Rally 125 Price:

Models  Ex-Showroom (TamilNadu)
Fascino S 125 Fi Hybrid (Drum&Disc) ₹ 82,650 to ₹ 92,650
Ray ZR 125 Fi Hybrid (Drum&Disc) ₹ 82,730 to ₹ 89,530
Ray ZR Street Rally 125 Fi Hybrid (Disc) ₹ 94,410

Tags: Yamaha FascinoYamaha Ray-ZR
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version