Yamaha FZ-S FI Ver 4.0 DLX

₹.1,23,149 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள யமஹா FZ-S Ver 4.0 DLX பைக்கில் பல்வேறு நவீனத்துவமான வசதிகளில் டிராக்‌ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது.

150சிசி மார்கெட்டில் முதன்முறையாக FZ-S FI Ver 4.0 DLX மாடலில் இழுவை கட்டுப்பாட்டு அமைப்பு (Traction Control System – TCS) சேர்க்கப்பட்டு இதற்காக பிரத்யேக மின்னணு அமைப்பின் மூலம் வீல் ஸ்பின் ஆகி சாலைகளில் ஏற்படும் டிராக்‌ஷன் இழப்பினை ஈடுகட்டி வாகனம் நிலை தடுமாறுவதனை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

யமஹா FZ-S FI Ver 4.0 DLX

11 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்த 150சிசி சந்தையில் இளைய தலைமுறையினரின் மிக விருப்பமான FZ-S FI பைக்கில் ஏர் கூல்டு 149cc என்ஜின் SOHC, 2 வால்வுகளை கொண்டு அதிகபட்சமாக 12.4PS பவரை 7,250 rpm-ல் வழங்கும் நிலையில் 5,500 rpm-ல் 13.3 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. புதிய OBD-2 மற்றும் E20 எரிபொருள் பயன்படுத்தும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட புதிய D வடிவ எல்இடி ஹெட்லேம்ப் வடிவமைப்பினை வெளிப்படுத்துகின்ற FZ-S FI வெர்ஷன் 4.0 டீலக்ஸ் மாடலில் ஹை மற்றும் லோ பீம் என இரண்டிற்கும் தனித்தனியான லைட்டுகளை யமஹா நிறுவனம் வழங்கியுள்ளது. அலாய் வீல்களுக்கு நிறம் வழங்கப்பட்டு 3D லோகோ இணைக்கப்பட்டுள்ளது.

யமஹா மோட்டார் சைக்கிள் கனெக்ட் எக்ஸ் பயன்பாட்டில் 6 முக்கிய அம்சங்கள் வழங்கபட்டுள்ளன. அவற்றை மொபைலின் ‘ஒரே தொடுதல்’ மூலம் பைக்கை இணைக்க வகையில் உருவாக்கப்படுடள்ளது. மொபைல் சாதனத்திலிருந்து வாகன இருப்பிடத்தை அறிய, மற்றும் பைக்கினை இ-லாக் செய்ய இயலும்.

முன்பக்கத்தில் ஒற்றை-சேனல் ஏபிஎஸ் மற்றும் பின்புறத்தில் டிஸ்க் பிரேக், மல்டி ஃபங்க்ஷன் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், எல்இடி ஹெட்லைட், டயர்-ஹக்கிங் ரியர் மட்கார்ட் மற்றும் லோயர் என்ஜின் கார்டு வழங்கப்பட்டுள்ளது.

Yamaha FZ-S Ver 4.0 DLX விலை

புதிய FZ-S FI Ver 4.0 DLX மாடலில் மெட்டாலிக் கிரே மற்றும் மெஜெஸ்டி ரெட் என இரு நிறங்களும் ரூபாய் 1,23,149 மற்றும் மெட்டாலிக் பிளாக் விலை ரூபாய் 1,24,139 ஆகும்.

(விலை விபரம் தமிழ்நாடு எக்ஸ்ஷோரூம் )

இந்த மாடலை தவிர யமஹா MT-15 V2.0 , FZ-Fi , R15M, R15 V4 மற்றும் FZ-X மாடலும் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.