Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2024 பஜாஜ் பல்சர் NS பைக்குகளின் ஆன் ரோடு விலை பட்டியல்

by MR.Durai
3 May 2024, 3:08 pm
in Bike News
0
ShareTweetSend

2024 பஜாஜ் பல்சர் என்எஸ் பைக்குகளில் விற்பனைக்கு உள்ள என்எஸ் 400, என்எஸ் 200, என்எஸ் 160, மற்றும் என்எஸ் 125 ஆகிய நான்கு மாடல்களின் சிறப்புகள் மற்றும் ஆன் ரோடு விலை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

2024 ஆம் ஆண்டின் மூன்று மாடல்களின் ஸ்போர்ட்டிவான தோற்ற அமைப்புடன் புதுப்பிக்கப்பட்ட எல்இடி ஹெட்லைட் மற்றும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் உடன் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியுடன் மேம்படுத்தப்பட்ட பாடி கிராபிக்ஸ் கொண்டுள்ளது.

2024 bajaj pulsar ns onroad bike price list

2024 Bajaj Pulsar NS125

பஜாஜின் பல்சர் என்எஸ் வரிசையில் உள்ள குறைந்த விலை 125 என்எஸ் பைக்கில் 124.45cc ஒற்றை சிலிண்டர், ஏர்-கூல்டு எஞ்சின்  8,500rpm-ல் 11.64 hp  8,500rpm-ல் மற்றும் 11 Nm டார்க்கை வழங்குவதுடன் இந்த மாடலில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் கிடைக்கின்றது.

டெலிஸ்கோபிக் ஃபோர்க் இணைக்கப்பட்டு, 240 மிமீ டிஸ்க் பிரேக்குடன் பின்புறத்தில் நைட்ராக்ஸ் மோனோஷாக் சஸ்பென்ஷனுடன் 130 மிமீ டிரம் பிக்குடன் சிபிஎஸ் சேர்க்கப்பட்டுள்ளது.  ஸ்பிளிட் சீட், பெல்லி பேன், ஸ்டைலிங் பாடி கிராபிக்ஸ், பெட்ரோல் டேங்கில் ஷோர்ட்ஸ் போன்றவை கூடுதலாக பெற்றுள்ளது.

2024 பஜாஜ் பல்சர் என்எஸ் 160 பைக் மாடல் விலை ரூ.1.13 லட்சம் (எக்ஸ்ஷோரூம் சென்னை)

   Bajaj Pulsar NS125
Engine Displacement (CC) 124.45 cc
Power (PS@rpm) 12 PS @ 8500 rpm
Torque (Nm@rpm) 11 Nm @ 7000 rpm
Gear Box 5 Speed

2024 பஜாஜ் பல்சர் NS125 பைக்கின் ஆன்ரோடு விலை ₹ 1.26 லட்சம் வரை உள்ளது.

2024 பஜாஜ் பல்சர் NS125 பைக்

2024 Bajaj PULSAR NS160

பல்சர் என்எஸ் 160 பைக்கில் 160.3cc ஒற்றை சிலிண்டர் ஆயில் கூல்டு என்ஜின் 4 வால்வு பெற்று 9,000 rpm-ல் அதிகபட்சமாக 17.03 bhp பவர் மற்றும் 7,250 rpm-ல் டார்க் 14.6 Nm வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலிலும் ஐந்து வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் பெற்று 100/80 – 17 டயர் முன்பக்கத்தில், பின்புறத்தில் 130/70 – 17 டயரை பெற்று ட்யூப்லெஸ் ஆக அமைந்துள்ளது. இந்த மாடலில் 300 மிமீ டிஸ்க் மற்றும் 230 மிமீ டிஸ்க் பெற்று பல்சரின் NS160 மாடலில் டூயல் சேனல் ஏபிஎஸ் (Anti-lock Braking System) உள்ளது.

2024 பஜாஜ் பல்சர் என்எஸ் 160 பைக் மாடல் விலை ரூ.1.46 லட்சம் (எக்ஸ்ஷோரூம் சென்னை)

   Bajaj Pulsar NS160
Engine Displacement (CC) 160.3 cc
Power (PS@rpm) 17.2 PS @ 9000 rpm
Torque (Nm@rpm) 14.6 Nm @ 7200 rpm
Gear Box 5 Speed

2024 பஜாஜ் பல்சர் NS160 பைக்கின் ஆன்ரோடு விலை ₹ 1.75 லட்சம் வரை உள்ளது.

2024 bajaj pulsar ns160

2024 Bajaj Pulsar NS200

ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்ற நேக்டூ ஸ்டீரிட் பல்சர் 200 என்எஸ் பைக்கில் 199.5சிசி லிக்யூடு கூல்டு என்ஜின் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 24 bhp மற்றும் 18.74 Nm டார்க்கை உற்பத்தி செய்கின்றது. இந்த பைக்கில் உள்ள 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் பெற்று 100/80 – 17 டயர் முன்பக்கத்தில், பின்புறத்தில் 130/70 – 17 டயரை பெற்று ட்யூப்லெஸ் ஆக அமைந்துள்ளது. இந்த மாடலில் 300 மிமீ டிஸ்க் மற்றும் 230 மிமீ டிஸ்க் பெற்று பல்சரின் NS200 மாடலில் டூயல் சேனல் ஏபிஎஸ் (Anti-lock Braking System) உள்ளது.

2024 பஜாஜ் பல்சர் என்எஸ் 200 பைக் மாடல் விலை ரூ.1.57 லட்சம் (எக்ஸ்ஷோரூம் சென்னை)

   Bajaj Pulsar NS200
Engine Displacement (CC) 199.5 cc
Power (PS@rpm) 24.5 PS @ 9250 rpm
Torque (Nm@rpm) 18.74 Nm @ 8000 rpm
Gear Box 6 Speed

2024 பஜாஜ் பல்சர் NS200 பைக்கின் ஆன்ரோடு விலை ₹ 1.88 லட்சம் வரை உள்ளது.

pulsar-ns125

2024 Bajaj Pulsar NS400Z

பல்சர் வரிசை பைக்குகளில் டாப் மாடலாக நிலை நிறுத்தப்பட்டுள்ள புதிய பல்சர் என்எஸ் 400 இசட் பைக்கில் 373சிசி லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மிக சிறப்பான ஸ்டைலிங் அம்சங்களுடன் கருப்பு, வெள்ளை, சிவப்பு மற்றும் கிரே என நான்கு நிறங்களுடன் அட்ஜெஸ்டபிள் லிவர், டிராக்‌ஷன் கண்ட்ரோல் உட்பட ரைட் பை வயர் டெக் நுட்பத்தை பெற்றுள்ள மாடலில் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் 4 விதமான ரைடிங் மோடுகள் இடம்பெற்றுள்ளது.

Bajaj Pulsar NS400

2024 பஜாஜ் பல்சர் என்எஸ் 400 பைக் மாடல் விலை ரூ.1.85 லட்சம் (எக்ஸ்ஷோரூம் சென்னை)

   Bajaj Pulsar NS400Z
Engine Displacement (CC) 373.27 cc
Power (PS@rpm) 40 PS @ 8800 rpm
Torque (Nm@rpm) 35 Nm @ 6600 rpm
Gear Box 6 Speed

Related Motor News

பஜாஜ் ஆட்டோவின் இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.20,000 வரை ஜிஎஸ்டி பலன்கள்.!

125சிசி பைக் சந்தையில் ஹோண்டா, ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ்

சாலையில் 2 கோடி பல்சர் பைக்குகள்..! பஜாஜ் ஆட்டோ சிறப்பு சலுகைகள்.!

பஜாஜ் கோகோ எலக்ட்ரிக் ஆட்டோரிக்‌ஷா விலை மற்றும் முக்கிய சிறப்புகள்.!

பஜாஜ் பல்சர் 125 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

பஜாஜ் பல்சர் NS125 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

2024 பஜாஜ் பல்சர் NS400Z பைக்கின் ஆன்ரோடு விலை ₹ 2.28 லட்சம் வரை உள்ளது.

Tags: bajaj autoBajaj PulsarBajaj Pulsar NS 125Bajaj Pulsar NS160Bajaj Pulsar NS200
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

yamaha wr 155r bike india launch date

நவம்பர் 11ல் யமஹாவின் இந்திய அறிமுகம் யார்..! WR 155 R அல்லது XSR 155..?

டிவிஎஸ் அப்பாச்சி RTX 300 BIKE

டிவிஎஸ் அட்வென்ச்சர் டூரிங் அக்டோபர் 15ல் அறிமுகம்

ஏபிஎஸ் பெற்ற டிவிஎஸ் ரைடர் 125 விற்பனைக்கு வெளியானது

110cc டிவிஎஸ் ஸ்கூட்டி ஸெஸ்டில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் அறிமுகமானது

125 மில்லியன் ஹீரோ பைக் விற்பனையை கொண்டாடும் சிறப்பு எடிசன் வெளியானது

ஏபிஎஸ் பெற்ற ரைடர் 125 மாடலை வெளியிடும் டிவிஎஸ் மோட்டார்

புதிய நிறத்தில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் விற்பனை துவங்கியது

ஹீரோவின் கிளாமர் எக்ஸ் வாங்குபவர்கள் அறிய வேண்டியது என்ன?

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 421 அட்வென்ச்சர் EICMA 2025ல் அறிமுகம்

சுசூகி 2026 V-STROM SX புதிய நிறங்களில் அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan