அட்வென்ச்சர் டூரிங் சந்தையில் கிடைக்கின்ற 2024 கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கில் இரண்டு புதிய நிறங்களை கொண்டு வந்துள்ளது. மற்றபடி, வசதிகள் தோற்ற அமைப்பில் பெரிதாக மாற்றமில்லாம் வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் 2024 கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கில் புதிய நிறங்களை தவிர வேறு எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
2024 KTM 250 Adventure
புதிய 2024 ஆம் ஆண்டு மாடலின் என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கில் 248.76cc சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு 9,000rpm-ல் 29.6bhp பவர், 7,500rpm-ல் 24Nm வெளிப்படுத்துகின்றது. இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் ஸ்லிப்பர் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.
பிரேக்கிங் அமைப்பில் ரேடியல் காலிபருடன் 320mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் ஃபுளோட்டிங் காலிபருடன் 230mm டிஸ்க் பெற்று இந்த பைக்கில் டூயல்-சேனல் ஏபிஎஸ் அம்சத்தை ஆஃப்-ரோடிங்கின் போது பின்புறத்தில் ஆஃப் செய்யும் வசதியும் உள்ளது
250 அட்வென்ச்சர் பைக்கில் ஹாலோஜன் ஹெட்லைட் உடன் கூடிய எல்இடி ரன்னிங் விளக்குகளுடன், எல்இடி டெயில்லைட் மற்றும் எல்இடி டர்ன் இண்டிகேட்டர் பெற்றுள்ளது. முழு டிஜிட்டல் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் பல்வேறு அம்சங்கள் கிடைக்கின்றது.
விரைவில், இந்திய சந்தையில் 2024 கேடிஎம் 250 அட்வென்ச்சர் மற்றும் 390 அட்வென்ச்சர் என இரண்டும் விற்பனைக்கு வரக்கூடும்.