டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற 2024 ஆம் ஆண்டிற்கான ஜூபிடர் 110 மாடலை ரூ.73,700 முதல் தற்பொழுது பல்வேறு மாறுபாடுகள் செய்யப்பட்டு விற்பனைக்கு வெளியிடப்பட்டிருக்கின்றது.
முந்தைய மாடலிலிருந்து முற்றிலும் மேம்பட்ட டிசைன் மற்றும் தொடர்ந்து மெட்டல் பாடியை கொண்டிருக்கின்ற இந்த மாடலில் மிகவும் நேர்த்தியான வகையில் பெட்ரோல் டேங்க் ஆனது முன்புறத்தில் உள்ள ஃப்ளோர் போர்டு அடியில் கொடுக்கப்பட்டிருப்பதால் இதற்கான இருக்கைக்கு அடியிலான ஸ்டோரேஜ் அமைப்பு தற்பொழுது ஜூபிடர் 125 போல விரிவடைந்து இரண்டு முழுமையான ஹெல்மெட்டுகளை உட்புறம் வைக்கும் வகையில் 33 லிட்டர் கொள்ளளவு ஸ்டோரேஜ் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது.
முன்புறத்தில் அப்ரானில் மிக அகலமான எல்இடி ரன்னிங் விளக்கு சேர்க்கப்பட்டு அதன் இரு பகுதிகளிலும் டர்ன் இன்டிகேட்டர் ஆனது இணைக்கப்பட்டிருக்கின்றது மேலும் முழுமையான எல்இடி ஹெட்லைட் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்ற இந்த மாடலில் மிக சிறப்பான வகையில் ஸ்டைலிங் அம்சங்கள் ஆனது மேம்படுத்தப்பட்டு நவீனத்துவமாகவும் விளங்கும் வகையில் அமைந்திருக்கின்றது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 113சிசி இஞ்சின் பயன்படுத்தப்பட்டு ஏர் கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 7.91PS பவர் மற்றும் 9.8Nm @ 5000rpm (with Assist) 9.2Nm @ 5000rpm (without Assist) டார்க் வெளிப்படுத்தும். இதில் சிவிடி கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்கும்.
IGo Assist எனப்படுகின்ற மைக்ரோ ஹைபிரிட் டெக்னாலஜியானது கொடுக்கப்பட்டிருக்கின்றது இதன் மூலம் பவர்ஃபுல்லான பேட்டரி கொடுக்கப்பட்டு இண்டெகரேட்டட் ஸ்டார்டிங் ஜெனரேட்டர் ஆனது இணைக்கப்பட்டிருக்கின்றது. இது சற்று மேடான இடங்களில் கூடுதல் பவரை வழங்கி நமக்கு சிறப்பான பயண அனுபவத்தை வழங்கவும் இன்ஜின் மைலேஜ் சிறப்பாக மேம்படுத்தவும் உதவுகின்றது.
இருபக்கமும் 90/90-12 அங்குள்ள டயரைப் பெற்று இரு பக்க டயர்களிலும் ட்ரம் பிரேக் அல்லது முன்புறத்தில் 220 மிமீ டிஸ்க் பின்புறத்தில் டிரம் பிரேக் என மாறுபட்ட ஆப்ஷன்களில் கம்பைண்டு பிரேக்கிங் சிஸ்டத்தை கொண்டு இருக்கின்றது.
ஆறு விதமான நிறங்களில் கிடைக்கின்ற இந்த புதிய மாடலில் டிஜிட்டல் கிளஸ்டர் ஆனது கொடுக்கப்பட்டு கனெக்டிவிட்டியை சார்ந்த அம்சங்களை பெறுகின்றது. drum, drum alloy, drum SmartXonnect மற்றும் disc SmartXonnect என நான்கு விதமான வேரியண்டுகளில் கிடைக்கின்றது.
- Drum Sheet Metal Wheel – Rs 73,700
- Drum Alloy – Rs 79,200
- Drum SmartXconnect – Rs 83,250
- Disc SmartXconnect -Rs 87,250