Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2024 Yamaha MT 15 V2 பைக்கின் சிறப்பு அம்சங்கள் மற்றும் ஆன்-ரோடு விலை

by MR.Durai
17 April 2024, 11:05 am
in Bike News
1
ShareTweetSend

2024 Yamaha MT-15 V2

ஆர்15 அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள 2024 ஆம் வருடத்தின் யமஹா MT-15 V2 நேக்டு ஸ்டைல் ஸ்போர்டிவ் மாடலில் உள்ள பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன் ரோடு விலை ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

மிக நேர்த்தியான எம்டி பைக்குகளுக்கு உரித்தான கம்பீரமான முரட்டுதனத்தை வெளிப்படுத்துகின்ற ஸ்டைலை பெற்றுள்ள எம்டி-15 வி2 பைக்கில் கூடுதலாக சியான் ஸ்ட்ரோம் DLX, சைபர் க்ரீன் DLX  என இரு புதிய நிறங்களுடன் தற்பொழுது 8 நிறங்களை கொண்டுள்ளது.

2024 Yamaha MT-15 V2

இந்திய சந்தையில் கிடைக்கின்ற 150-160சிசி வரையில் உள்ள பல்வேறு ஸ்போர்ட்டிவ் பைக்குகளை எதிர்கொள்ளுகின்ற MT-15 V2 பைக்கில் மிகவும் நேர்த்தியான தோற்றத்தை வழங்குவதில் சிறப்பான பங்களிப்புடன் இரவு நேரங்களில் அதிகப்படியான வெளிசத்தை ரைடருக்கு வழங்க எல்இடி ஹெட்லைட் ஆனது மேலே உள்ள எல்இடி ரன்னிங் விளக்குடன் அமைந்துள்ளது. பின்புறத்தில் எல்இடி டெயில் லைட் உள்ளது.

ஒற்றை இருக்கை அமைப்பு பில்லியன் ரைடருக்கு சிறப்பாக அமர்ந்து கொள்ளவும் கைகளை பிடிப்பதற்பாக கிராப் ரெயிலும் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு செயல்பாடுகளை ஆதரிக்கின்ற எல்சிடி டிஜிட்டல் கிளஸ்ட்டரில் யமஹா Y-Connect மூலம் ப்ளூடூத் வாயிலாக ஸ்மார்ட்போனை இணைக்கும் பொழுது கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளுடன், கால் அலர்ட், பேட்டரி இருப்பு, சராசரி மைலேஜ், பராமரிப்பு குறிப்புகள், ரெவஸ் டேஸ்போர்ட்  உள்ளிட்டவற்றுடன் இறுதியாக பார்க்கிங் செய்யப்பட்ட இடம் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

2024 yamaha mt-15 v2

இந்தியாவில் கிடைக்கின்ற R15 V4 மற்றும் MT-15 V2 என இரு பைக்கிலும் இடம்பெற்றுள்ள E20 ஆதரவுடன் கூடிய LC4V 155cc, லிக்யூடு கூல்டு SOHC நான்கு வால்வு, சிங்கிள் சிலிண்டர் VVA பெற்ற என்ஜின் 10000rpm-ல் 18.1 bhp பவர் மற்றும் 7,500rpm-ல் 14.2Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.  இந்த மாடலில் சிலிப்பர் அசிஸ்ட் உடன் கூடிய 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

வாகனம் நிலை தடுமாறுவதனை தடுக்கின்ற இழுவைக் கட்டுப்பாட்டு அமைப்பு (Traction Control System- TCS), கோல்டன் நிறத்திலான டெலிஸ்கோபிக் அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் லிங்க்டூ வகை மோனோஷாக் அப்சார்பர் பெற்று 170 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ள எம்டி-15 பைக்கில் 10 லிட்டர் பெட்ரோல் டேங்க் பெற்று மொத்த எடை 141 கிலோ ஆகும். யமஹா MT15 V2 பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 44-48KMPL வரை கிடைக்கின்றது.

நேக்டூ ஸ்டீரிட் பைக்கின் முன்பக்கம் 100/80-17M/C 52P டயர் கொண்டு 282 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 140/70 R17 M/C 66H ரேடியல் டயருடன் 220 மிமீ டிஸ்க் உடன் எம்டி-15 பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ், சைடு ஸ்டாண்ட் கட் ஆஃப் சுவிட்ச் வசதி உள்ளது. DLX மற்றும் மோட்டோஜிபி வேரியண்டில் மட்டும் y-connect வசதி உள்ளது.

2024 Yamaha MT15 V2 on road Price in Tamil Nadu

ரூ. 1,69,539 முதல் ரூ.1,75,039 வரை எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கின்ற யமஹா MT15 V2 பைக்கிற்கு போட்டியாளர்களாக டிவிஎஸ் அப்பாச்சி 160 RTR 4V,  ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V, சுசூகி ஜிக்ஸர் 155, பல்சர் NS160 மற்றும் பல்சர் N160 உள்ளது.

2024 Yamaha MT15 V2 ஆன் ரோடு விலை பட்டியல்

  • MT-15 METALLIC BLACK, MATTE BLUE – ₹ 2,07,890
  • MT-15 DLX (CYAN STORM, CYBER GREEN, METALLIC BLACK, ICE FLUO-VERMILLION, RACING BLUE) – ₹ 2,13,987
  • MT-15 MOTOGP Edition – ₹ 2,14,956

(on-road price Tamil Nadu)

கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஆன் ரோடு விலை கூடுதல் ஆக்சசெரீஸ் சேர்க்கப்பட்டால் மாறக்கூடும் என்பதனை அறிந்து கொள்ளுங்கள்.

2024 yamaha mt-15 v2

Related Motor News

யமஹா MT-15 பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

GST 2.0., யமஹா பைக்குகளில் R15 விலை குறைப்பு ரூ.17,581 வரை.!

கேடிஎம் 160 டியூக் Vs யமஹா MT-15 V2 ஒப்பீடு., எந்த பைக் வாங்கலாம்.?

ரூ.1.71 லட்சத்தில் புதிய யமஹா MT-15 v2.0 வெளியானது

இந்தியாவில் 10 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த யமஹா R15 V4 சூப்பர் ஸ்போர்ட் பைக்..!

இந்தியா வரவிருக்கும் யமஹா R9 சூப்பர் ஸ்போர்ட் பைக் அறிமுகமானது

Tags: YamahaYamaha MT-15
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டிவிஎஸ் அப்பாச்சி RTX 300 BIKE

டிவிஎஸ் அட்வென்ச்சர் டூரிங் அக்டோபர் 15ல் அறிமுகம்

2025 tvs raider 125 abs

ஏபிஎஸ் பெற்ற டிவிஎஸ் ரைடர் 125 விற்பனைக்கு வெளியானது

110cc டிவிஎஸ் ஸ்கூட்டி ஸெஸ்டில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் அறிமுகமானது

125 மில்லியன் ஹீரோ பைக் விற்பனையை கொண்டாடும் சிறப்பு எடிசன் வெளியானது

ஏபிஎஸ் பெற்ற ரைடர் 125 மாடலை வெளியிடும் டிவிஎஸ் மோட்டார்

புதிய நிறத்தில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் விற்பனை துவங்கியது

ஹீரோவின் கிளாமர் எக்ஸ் வாங்குபவர்கள் அறிய வேண்டியது என்ன?

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 421 அட்வென்ச்சர் EICMA 2025ல் அறிமுகம்

சுசூகி 2026 V-STROM SX புதிய நிறங்களில் அறிமுகமானது

₹ 2.99 லட்சத்தில் பிஎம்டபிள்யூ G 310 RR லிமிடெட் எடிசன் சிறப்புகள்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan