ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற 100cc ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்டெக் மாடலில் புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் மற்றும் நிறங்களுடன் ரூ.83,251 முதல் ரூ.86,551 வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மற்றபடி, OBD-2B ஆதரவினை பெற்ற ஸ்பிளெண்டர்+ பைக்கில் தொடர்ந்து 7.91 bhp மற்றும் 8.05 Nm டார்க் வழங்கும் 97.2cc எஞ்சின் பெற்று 4 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. இந்தியாவின் மிகவும் நம்பகமான மோட்டார்சைக்கிள் மற்றும் அதிக விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வரும் ஸ்பிளெண்டரில் வழக்கமான ஸ்பிளெண்டர் பிளஸ் உடன் ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்டெக் மற்றும் ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்டெக் 2.0 ஆகிய மூன்று பிரிவில் கிடைக்கின்றது.
தற்பொழுது 2025 ஆம் ஆண்டிற்கான மாடலில் புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் மற்றும் அதன் சார்ந்த நிறங்களில் மேம்படுத்தப்பட்டுள்ளது. பிளாக் டொரோன்டோ கிரே, ரெட் பிளாக், ஸ்பார்க்கிளிங் ப்ளூ, மற்றும் கருப்பு உடன் பச்சை நிற மஞ்சள் என மொத்தமாக 4 வண்ணங்களை பெற்றுள்ளது.
இந்த பைக்கில் முன்புறத்தில் தனியான எல்இடி ரன்னிங் விளக்குடன் வழக்கமான ஹெட்லைட் தோற்றத்துடன், டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் ப்ளூடூத் இணைப்பு, நிகழ் நேர மைலேஜ், 3டி ஹீரோ லோகோ ஆகியவற்றை பெற்றுள்ளது.
முன்புறத்தில் 240 மிமீ டிஸ்க் அல்லது 130 மிமீ டிரம் என இரு ஆப்ஷனுடன் பொதுவாக பின்புறத்தில் டிரம் பிரேக்குடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்தை பெற்று 18 அங்குல வீலுடன் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் மற்றும் பின்புறத்தில் ஹைட்ராலிக் ட்வீன் ஷாக் அப்சார்பர் உள்ளது.
- SPLENDOR+ XTEC DRUM BRAKE OBD2B ₹ 83,251
- SPLENDOR+ XTEC DISC BRAKE OBD2B ₹ 86,551