இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற ஸ்கூட்டர்களில் ஒன்றான டிவிஎஸ் ஜூபிடர் 125 மாடலில் கூடுதலாக DT SXC என்ற வேரியண்டில் இரட்டை வண்ண கலவையை பெற்று ஐவரி
பழுப்பு மற்றும் ஐவரி கிரே என இரு நிறங்களுடன் ரூ.97,516 எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது.
ஜூபிடர் 125 ஸ்கூட்டரில் தொடர்ந்து 124.8cc ஒற்றை சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 8.1hp பவர் மற்றும் 11.1 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. குறிப்பாக அசிஸ்ட் இல்லாத மாடலை விட சுமார் 0.6nm டார்க் கூடுதலாக வெளிப்படுத்துவதுடன் iGO Assist நுட்பத்தை கொண்டிருப்பதனால் கூடுதல் மைலேஜ் வழங்கும் என குறிப்பிட்டுள்ளது.
- Drum Alloy – ₹ 90 896
- Disc -₹ 95 996
- DT SXC – ₹ 97 516
- SmartXonnect – ₹ 99 985
(எக்ஸ்-ஷோரூம்)
முழுமையான எல்சிடி கிளஸ்ட்டரை பெறுகின்ற இந்த ஸ்கூட்டரில் SmartXonnect மூலம், ப்ளூடூத் வாயிலாக இணைத்தால் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி எச்சரிக்கைகள், டர்ன் பை டர்ன் நேவிகேஷன், குரல் கட்டளை மற்றும் வாகன கண்காணிப்பு போன்ற நவீன அம்சங்கள் கொண்டுள்ளது.
டைமண்ட் கட் அலாய் வீல் உடன் 33 லிட்டர் கொள்ளளவு பெற்ற பூட்ஸ்பேஸ் கொண்ட ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், பின்புறத்தில் ஒற்றை ஹைட்ராலிக் சஸ்பென்ஷனை கொண்டு, முன்பக்கத்தில் டிஸ்க் மற்றும் டிரம் பின்புறத்தில் டிரம் பிரேக்குடன் கம்பைன்ட் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.
மற்ற வேரியண்டுகளில் வழக்கமான முந்தைய டிசைனில் எந்த மாற்றமும் இல்லாமல் வந்துள்ளது. இந்த மாடலுக்கு போட்டியாக சுசூகி ஆக்செஸ் 125, ஆக்டிவா 125, டெஸ்டினி 125, ஃபேசினோ 125 உள்ளிட்ட மாடல்கள் கிடைக்கின்றன.