டிவிஎஸ் மோட்டாரின் அதிகம் விற்பனையாகின்ற பிரசத்தி பெற்ற ஜூபிடர் ஸ்கூட்டர் வரிசையில் உள்ள 125சிசி எஞ்சின் பெற்ற மாடலை விரைவில் பல்வேறு புதுப்பிக்கப்பட்ட வசதிகளை பெற்றதாக விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பாக வெளியான ஜூபிடர் 110 பல்வேறு ஸ்டைலிங் மாற்றங்களுடன் அதிகப்படியான பூட்ஸ்பேஸ் கொண்ட மாடலாக ஜூபிடர் 125 போல அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து அமோக ஆதரவினை பெற்று தற்பொழுது இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படுகின்ற இரண்டாவது ஸ்கூட்டர் பிராண்ட் மாடலாக உள்ளது.
தனது சமூக ஊடகபக்கங்களில் டிவிஎஸ் வெளியிட்டுள்ள டீசர் மூலம் “Style, Power, Performance” போன்ற வாசகங்களை குறிப்பிட்டுள்ளது. வரவுள்ள 2025 டிவிஎஸ் ஜூபிடர் 125 மாடலில் தொடர்ந்து சிறப்பான பூட்ஸ்பேஸ் கொண்டு OBD-2B மேம்பாட்டை பெற்ற 124.8cc ஒற்றை சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 8.1hp பவர் மற்றும் 10.5 Nm டார்க் வெளிப்படுத்தும்.
டிசைன் மாற்றங்களை பொறுத்தவரை சமீபத்தில் வந்த ஜூபிடர் 110 போல எல்இடி ரன்னிங் விளக்குகளை பெற்று எல்இடி ஹெட்லைட் அமைப்புடன் பல்வேறு புதிய நிறங்களை கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், ஜூபிடர் 125 சிஎன்ஜி அறிமுகம் குறித்தான முக்கிய தகவல்களும் வெளியாகலாம் என கூறப்படுகின்றது.