முன்பாக வெளியான FZ-S Fi ஹைபிரிட் மாடலை தொடர்ந்து தற்பொழுது 2025 யமஹா FZ-X மோட்டார்சைக்கிளிலும் கூடுதல் மைலேஜ் வழங்கும் வகையிலான ஹைபிரிட் சார்ந்த நுட்பத்துடன் ரூ.1,51,729 எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. ஹைபிரிட் கொண்ட மாடல் வழக்கமான மாடலை விட ரூ.20,000 வரை விலை கூடுதலாக அமைந்துள்ளது.
ஹைபிரிட் மட்டுமல்லாமல் கூடுதலாக 4.2 அங்குல TFT கிளஸ்ட்டர் சேர்க்கப்பட்டு Yamaha’s Y-Connect செயலி மூலம் கூகிள் மேப்ஸுடன் ஒருங்கிணைக்கப்பட்ட டர்ன் பை டர்ன் நேவிகேஷன், நிகழ் நேர திசைகள், போக்குவரத்து சார்ந்த அறிவிப்புகளுடன் பல்வேறு ரைடிங் சார்ந்த அம்சங்களை வழங்குகின்றது.
FZ-S Fi ஹைபிரிட் பைக்கில் உள்ள அதே எஞ்சினை பகிர்ந்து கொள்ளுகின்ற ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் உதவி அமைப்பினை பெற்று 149cc ஒற்றை சிலிண்டர் பெற்று அதிகபட்சமாக 7,250rpm-ல் 12.4hp மற்றும் 5,500rpm-ல் 13.3Nm டார்க் வெளிப்படுத்துகின்ற மாடலில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
மற்றபடி, வழக்கமான மாடலை போலவே அமைந்துள்ள FZ-X-ல் ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டத்துடன் கூடுதலாக டிராக்ஷன் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் ஒற்றை-சேனல் ABS போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இந்த மோட்டார் சைக்கிள் முன்பகுதியில் டிஸ்க் பிரேக் பெற்று டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் மற்றும் 7 படியில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோகிராஸ் பின்புற சஸ்பென்ஷனை பெற்றுள்ளது.
2025 Yamaha FZ-X விலை பட்டியல்
- FZ-X Fi – ரூ.1,31,729 (Dark Matte Blue and Metallic Black)
- FZ-X Fi Hybrid – ரூ.1,51,729 (MATTE TITAN)