ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ரோட்ஸ்டெர் மாடலின் ஆரம்ப விலை ரூ.2.10 லட்சம் முதல் ரூ.2.26 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு டிசைன் மாற்றங்கள் கூடுதலான ஆக்செரீஸ் என சிறப்பான மேம்பாடுகளை கொண்டுள்ளது.
புதிய ஆல்பா 2 எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ள ரோட்ஸ்டெரில் 334cc, லிக்யூடு கூல்டு ஒற்றை சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 28.6bhp மற்றும் 30Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் ஆறு வேக கியர்பாக்ஸுடன் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய ரோட்ஸ்டெரில் பின்புற ஸ்பிராக்கெட்டில் கூடுதலாக இரண்டு பற்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
டிசைன் மாற்றங்களில் மிக முக்கியமாக பின்புற ஃபெண்டர் மற்றும் ஸ்விங்கார்மில் சில மாற்றங்கள் பாபெர் வடிவத்தை பெற்றதாகவும், எல்இடி ஹெட்லைட் உடன் பின்புறத்தில் டெயில் விளக்கு மற்றும் இன்டிகேட்டரும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ட்வீன் ஷாக் அப்சார்பருடன், ட்யூப்லெஸ் டயருடன் பிரேக்கிங்கை முன்பக்கத்தில் 320 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக் உள்ளது.
புதிய ரோட்ஸ்டெர் பைக்கிற்கு 4 ஆண்டுகள் அல்லது 50,000 கிமீ வரை வாரண்டி வழங்கப்படுகின்றது.