இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற நடுத்தர மோட்டார் சைக்கிள் மாடல்களான யெஸ்டி பைக் நிறுவனத்தின் ரோட்ஸ்டெர், ஸ்கிராம்பளர் மற்றும் அட்வென்ச்சர் என மூன்று மாடல்களின் என்ஜின், சிறப்புகள், விலை உட்பட அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் கிளாசிக் லெஜென்டஸ் நிறுவனத்தின் கீழ் ஜாவா, யெஸ்டி மற்றும் பிஎஸ்ஏ பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றது. பொதுவாக ஜாவா மற்றும் யெஸ்டி பைக்குகள் ஒரே என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்றன.

கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆன்-ரோடு விலை பட்டியலும் தமிழ்நாட்டின் தோராயமானதானது, விலை விபரம் டீலர்களுக்கு டீலர் மாறுபடும்.. துல்லியமான விலையை அறிய டீலரை தொடர்பு கொள்ளுங்கள்.

2023 Yezdi Adventure

ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற பைக் மாடலாக விளங்கும் யெஸ்டி அட்வென்ச்சர் பைக்கில் 334 cc ஒற்றை சிலிண்டர் லிக்யூடூ கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு, முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் உடன் 21 அங்குல அலாய் வீல், மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பருடன் 17 அங்குல வீல் உள்ளது.

யெஸ்டி அட்வென்ச்சர் பைக்கிற்கு போட்டியாக ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன், ஸ்கிராம் 411, சுசூகி V ஸ்ட்ரோம் SX மற்றும் கேடிஎம் 250 அட்வென்ச்சர் போன்றவை உள்ளது.

Yezdi Adventure
என்ஜின் (CC) 334 cc
குதிரைத்திறன் (bhp@rpm) 29.89 bhp @ 8000 rpm
டார்க் (Nm@rpm) 29.84 Nm @ 6500 rpm
கியர்பாக்ஸ் 6 Speed
மைலேஜ் 30 Kmpl

2023 யெஸ்டி அட்வென்ச்சர் பைக்கின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 2,54,125 முதல் ₹ 2,57,348 வரை ஆகும்.

2023 Yezdi Roadster

மிக நேர்த்தியான ஸ்டைலிங் அம்சத்தை பெற்ற யெஸ்டி ரோட்ஸ்டெர் பைக் மாடலில் 334 cc லிக்யூடு கூல்டு என்ஜின் பெற்று முன்புறத்தில் 18 அங்குல வீல் மற்றும் பின்புற 17 அங்குல வீல் பெற்றதாக அமைந்துள்ளது.

ரோட்ஸ்டெர் பைக்கிற்கு போட்டியாக ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350, ஹோண்டா ஹைனெஸ் CB 350, மற்றும் ஜாவா 42 உள்ளிட்ட மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

Yezdi Roadster
என்ஜின் (CC) 334 cc
குதிரைத்திறன் (bhp@rpm) 29.23 bhp @ 8000 rpm
டார்க் (Nm@rpm) 29.84 Nm @ 6500 rpm
கியர்பாக்ஸ் 6 Speed
மைலேஜ் 30 Kmpl

2023 யெஸ்டி ரோட்ஸ்டெர் பைக்கின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 2,40,625 முதல் ₹ 2,50,348 வரை ஆகும்.

2023 Yezdi Scrambler

ஸ்கிராம்பளர் ஸ்டைலை பெற்ற யெஸ்ட் ஸ்கிராம்பளர் பைக் மாடலும் அதே 334 cc லிக்யூடு கூல்டு என்ஜின் பெற்று முன்புறத்தில் 19 அங்குல வீல் மற்றும் பின்புற 17 அங்குல வீல் பெற்றதாக அமைந்துள்ளது.

யெஸ்டி ஸ்கிராம்களருக்கு போட்டியாக ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 411, ஹோண்டா சிபி 350RS போன்றவை உள்ளது.

Yezdi Adventure
என்ஜின் (CC) 334 cc
குதிரைத்திறன் (bhp@rpm) 28.89 bhp @ 8000 rpm
டார்க் (Nm@rpm) 29.84 Nm @ 6500 rpm
கியர்பாக்ஸ் 6 Speed
மைலேஜ் 30 Kmpl

2023 யெஸ்டி ஸ்கிராம்பளர் பைக்கின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 2,48,551 முதல் ₹ 2,54,348 வரை ஆகும்.