இந்தியாவில் புதிதாக களமிறங்கியுள்ள 22 கிம்கோ (22 Kymco) நிறுவனம், ஐஃப்ளோ மின்சார ஸ்கூட்டர் உட்பட லைக் 200 மற்றும் எக்ஸ்-டவுன் 300ஐ என இரண்டு பெட்ரோல் என மொத்தம் மூன்று ஸ்கூட்டர்களை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்ந 22 மோட்டார்ஸ் மற்றும் 55 ஆண்டுகால மோட்டார் அனுபவமிக்க தைவான் நாட்டை சேர்ந்த கிம்கோ நிறுவனமும் இணைந்து 22 கிம்கோ என்ற பெயரில் இந்திய சந்தையில் முதற்கட்டமாக புது டெல்லி, அகமதாபாத், பெங்களூரு, புனே, ஹைத்திராபாத் மற்றும் கோல்கத்தா போன்ற நிறுவனங்களில் தனது விற்பனையை துவங்கியுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் 300 டீலர்களை துவங்கவதற்கு திட்டமிட்டுள்ளது. மின்சார ஸ்கூட்டர்களுக்கு என சார்ஜிங் நிலையங்களை ionex என்ற பெயரில் தொடங்க உள்ளது. ஒவ்வொரு நகரங்களிலும் 40 சார்ஜிங் நிலையங்களை துவங்க திட்டமிட்டுள்ளது.
22 கிம்கோ
ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ள 22 கிம்கோ ஸ்கூட்டர்கள் முதற்கட்டமாக ஆண்டுக்கு 1 லட்சம் ஸ்கூட்டர்களும் படிபடிப்பயாக 2 லட்சமாக உயர்த்தப்பட உள்ளது.
22 கிம்கோ ஐஃப்ளோ
பேட்டரியில் இயங்கும் 22 KYMCO iFlow ஸ்கூட்டர் முதன்முறையாக 2018 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் வெளியிடப்பட்ட ஃப்ளோ ஸ்கூட்டரின் மேம்படுத்தப்பட்ட மாடலாகும். 6 விதமான நிறங்களில் இரு டயர்களிலும் டிஸ்க் பிரேக் பெற்ற இந்த மாடலில் சிபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டு பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 60 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய ஐ ஃப்ளோ ஸ்கூட்டரில் இரண்டு பேட்டரிகளை பயன்படுத்தலாம்.
ரூ.90,000 விலையில் 22 கிம்கோ ஐ ஃப்ளோ ஸ்கூட்டரில் பேட்டரி வழங்கப்படாது. பேட்டரியை கிம்கோ நிறுவனம் மாதந்திர வாடகை முறையில் ஒரு பேட்டரிக்கு ரூ.500 வசூலிக்க உள்ளது. 5 வருட வாரண்டி இந்த ஸ்கூட்டருக்கு வழங்கப்படுகின்றது.
22 கிம்கோ லைக் 200
கிம்கோ வெளியிட்டுள்ள பெட்ரோல் என்ஜின் கொண்ட மாடலின் நுட்ப விபரம் வெளியாகவில்லை. 22 KYMCO Like 200 மாடலானது ரெட்ரோ தோற்ற அமைப்பினை கொண்ட ஸ்கூட்டராக ரூ. 1.30 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.
22 கிம்கோ X-Town 300i
மேக்ஸி ரக ஸ்கூட்டர் மாடலான 22 கிம்கோ எக்ஸ்-டவுன் 300ஐ ஸ்கூட்டரில் 276 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 24.5 பிஎஸ் பவரையும், 25 என்எம் டார்க் திறனையும் வழங்க உள்ளது. இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.2.30 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.