இந்தியாவின் சாலையின் இரு சக்கர வாகன ராஜாக்களில் ஒன்றான யமஹா RX100 மாடல் புதுப்பிக்கப்பட்ட RX200 அல்லது RX300 ஆக விற்பனைக்கு வெளியாகலாம் என இந்தியா யமஹா மோட்டார் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
2 ஸ்ட்ரோக் பெற்ற ஆர்எக்ஸ் 100 பைக் மாடல் இன்றைக்கும் அசாத்திய மறுவிற்பனை கொண்ட மாடலாக வலம் வருகின்றது. 2 ஸ்ட்ரோக்கில் வெளியிடுகின்ற எக்ஸ்ஹாஸ்ட் நோட் இன்றைக்கும் இளைய தலைமுறையினரை கவர்ந்திழுக்கின்றது.
யமஹா இந்தியா தலைவர் ஈஷின் சிஹானா கூறுகையில், சர்வதேச சந்தைகளில் RX100 பைக்கின் வரலாற்றை தனக்கு எப்படி நன்றாகத் தெரியுமோ, ஆனால் இந்தியாவில் அனைத்து வயதினருக்கும் பைக் எவ்வளவு சிறியதாக இருந்தது என்பது தன்னை ஆச்சரியப்படுத்தியது.
யமஹா ஆர்எக்ஸ் 100 இந்தியாவிற்கு மிகவும் சிறப்பான மாடல் என்றும், அதன் ஸ்டைலிங், குறைந்த எடை, சக்தி மற்றும் ஒலி ஆகியவை தான் அதை உருவாக்கியது என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார். நான்கு-ஸ்ட்ரோக் மாதிரியில் அந்த அளவுகோல்களை மீண்டும் உருவாக்க, “குறைந்தபட்சம் 200cc ஆக இருக்க வேண்டும், ஆனால் அங்கே கூட உங்களால் ஒரு சிறந்த எக்ஸ்ஹாஸ்ட் ஒலியை உருவாக்க முடியாது”.
“ஆர்எக்ஸ் 100 பைக் பிராண்டை அழிக்கும் எண்ணம் எங்களிடம் இல்லை. எனவே சரியான செயல்திறனுடன், இலகுரக பைக் மாடலை எங்களால் தயாரிக்க முடியும் என்று உறுதியாக நம்பும் வரை, நாங்கள் அதை வெளியிட மாட்டோம். தற்போதைய வரிசையில், 155சிசி என்ஜின் போதுமானதாக இல்லை.
மேலும் படிக்க – சரித்திர நாயகன் யமஹா RX100 வரலாறு
எனவே, ஆர்எக்ஸ் பிராண்டு ஆனது 250cc அல்லது அதற்கு கூடுதலாக 300cc என்ஜினை பெற்று தொடர்ந்து சிறப்பான எக்ஸ்ஹாஸ்ட் ஒலியை எழுப்பும் மாடலாக விளங்கலாம். அனேகமாக புதிய யமஹா ஆர்எகஸ் பைக் ராயல் என்ஃபீல்டு, ஜாவா, ஹார்லி-டேவிட்சன், பஜாஜ்-ட்ரையம்ப் மற்றும் ஹோண்டா ஹைனெஸ் போன்றவற்றை எதிர்கொள்ளும் வகையில் வரக்கூடும். ஆனால் எப்பொழுது அறிமுகம் செய்யப்படும் என்ற உறுதியான தகவல் இல்லை.