Automobile Tamilan Automobile Tamilan
  • Home
  • Car News
  • Bike News
  • Auto News
  • Auto Industry
  • Truck
  • TIPS
  • Bus
Notification
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Font ResizerAa
Search
Have an existing account? Sign In
Follow US
Bike News

ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் ஆன்-ரோடு விலை பட்டியல் – மே 2023

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 1,June 2023
Share
3 Min Read
SHARE

ampere e scooter on road tamilnadu price

Contents
  • Ampere Primus
  • Ampere Magnus EX
  • Ampere Zeal EX

இந்தியாவின் பிரபலமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஆம்பியர் நிறுவனத்தின் மாடல்களின் பேட்டரி, ரேஞ்சு, சார்ஜிங் நேரம் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியல் என அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.

ஆம்பியர் நிறுவனம், தற்பொழுது மூன்று பேட்டரி ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றது. அவை, பிரைமஸ் , மேக்னஸ் EX,  மற்றும் ஜீல் EX ஆகும். FAME-II மோசடியால் விலை உயர்ந்துள்ளது.

ampere-primus-color

Ampere Primus

அம்பியர் நிறுவனத்தின் அதிகவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக விளங்குகின்ற பிரைமஸ் மாடலின் அதிகபட்ச வேகம் 77Km/h மற்றும் முழுமையான சிங்கிள் சார்ஜில் 107 Km பயணிக்கலாம் என சான்றிதழ் வழங்கப்பட்டுளது. 12 அங்குல வீல் பெற்று இருபக்க டயர்களிலும் டிரம் பிரேக் உடன் கனெக்ட்டிவிட்டி வசதிகளை வழங்குவதுடன் நேவிகேஷன் அசிஸ்ட் வழங்குகின்றது. ஆம்பியர் பிரைமஸ் மின்சார ஸ்கூட்டரின் தமிழ்நாடு எக்ஸ்ஷோரும் விலை ₹ 1,49,000 ஆகும்.

Ampere Primus Specification
Battery pack 3.00 kWh
Top Speed 77 km/h
Range (IDC claimed) 107 km
Real Driving Range 70-80 km
Charging Time 5 hrs
Riding modes Eco, Power,City, Reverse

பிரைமஸ் ஸ்கூட்டருக்கு போட்டியாக பஜாஜ் சேட்டக், ஒகினவா ப்ரைஸ் புரோ, டிவிஎஸ் ஐக்யூப், ஏதெர் 450x விடா வி1, பிகாஸ் D15, ஓலா S1 ஏர் உள்ளிட்ட மாடல்கள் உள்ளது.

2023 ஆம்பியர் பிரைமஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ₹ 1,65,450

More EV News

ரூ.18 லட்சம் விலையில் ட்ரையம்ப் ராக்கெட் 3 வெளியானது
புதிய சுசூகி ஸ்விஷ் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது
2018 பஜாஜ் பல்சர் பிளாக் பேக் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்
ரூ.2 லட்சத்திற்குள் டிரையம்ப் பைக்குகள்.., பஜாஜ்-ட்ரையம்ப கூட்டணி
பஜாஜ் பல்சர் 125 Vs ஹோண்டா எஸ்பி 125 ஒப்பீடு – எந்த பைக் பெஸ்ட் சாய்ஸ் ?

primus rcb edition

Ampere Magnus EX

அடுத்த மாடல் ஆம்பியர் மேக்னஸ் EX ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் 53Km/h ஆக உள்ள நிலையில் ரிமுவெபிள் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச பவர் 1.2Kw வெளிப்படுத்துகின்ற இந்த மாடலில் 2.295 kWh பேட்டரி பொருத்தப்பட்டு சிங்கிள் சார்ஜில் 100 km வரை வழங்கும்.

Ampere Magnus EX Specification
Battery pack 2.295 kWh
Top Speed 53 km/h
Range (IDC claimed) 100 km
Real Driving Range 60-70 km
Charging Time 6 hrs
Riding modes Eco, Reverse

மேக்னஸ் EX மின்சார ஸ்கூட்டருக்கு போட்டியாக ஓலா எஸ்1 ஏர், ஹீரோ எலக்ட்ரிக் ஆப்டிமா, ஒகினாவா பிரைஸ் உள்ளிட்ட மாடல்கள் உள்ளது.

2023 ஆம்பியர் மேக்னஸ் EX எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 1,17,450

ampere magnus

Ampere Zeal EX

இறுதியாக ஆம்பியர் ஜீல் EX ஸ்கூட்டர் மாடல் அதிகபட்சமாக 50Km/h வேகத்தில் பயணிக்கும் திறனுடன் 120Km ரேஞ்சு வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இருபக்க டயர்களிலும் டிரம் பிரேக் சேர்க்கப்பட்டு 2.3 kWh லித்தியம் ஐயன் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் சார்ஜிங் நேரம் 7 மணி நேரம் ஆகும்.

Ampere Zeal EX Specification
Battery pack 2.3 kWh
Top Speed 53 km/h
Range (IDC claimed) 120 km
Real Driving Range 80-90 km
Charging Time 7 hrs
Riding modes –

ஜீல் EX மின்சார ஸ்கூட்டருக்கு போட்டியாக ப்யூர் இபுளோடோ, ஒகினவா ரிட்ஜ், ஓலா எஸ்1 ஏர் போன்றவை உள்ளது.

2023 ஆம்பியர் Zeal EX எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ₹ 1,06,450

ampere zeal

கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விலைகளும் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை பட்டியல் ஆகும். விலை விபரம் அனைத்தும் தோராயமானதாகும்.

last updated – 01-06-2023

இந்தியாவில் யமஹா MT15 பைக்கின் வெளியீட்டு விபரம்
யமஹா சிக்னஸ் ஆல்ஃபா டிஸ்க் பிரேக் விற்பனைக்கு அறிமுகம்
மீண்டும் தள்ளிப்போகிறதா.., ஹஸ்க்வர்னா பைக்குகளின் இந்திய அறிமுகம்
சாகசப் பிரியர்கள் விரும்பும் சுஸுகி-யின் ஸ்போர்ட்ஸ் பைக்
ஹீரோ Xtreme 160R 4V vs Xtreme 160R 2V எந்த பைக் வாங்கலாம் ?
TAGGED:Ampere Magnus EXAmpere PrimusAmpere Zeal EXElectric Scooter

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
ByMR.Durai
Follow:
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 ஏதெர் 450 இ ஸ்கூட்டர்
Ather energy
2025 ஏதெர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 சுசூகி ஜிக்ஸர் 250
Suzuki
2025 சுசூகி ஜிக்ஸர் 250 பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
2023 ஹோண்டா CD 110 ட்ரீம் டீலக்ஸ்
Honda Bikes
2024 ஹோண்டா CD 110 ட்ரீம் டீலக்ஸ் பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
சுசூகி ஜிக்ஸர்
Suzuki
2025 சுசூகி ஜிக்ஸர் 155 பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
Previous Next
Automobile Tamilan - All Rights Reserved
2025 Automobile Tamilan - All Rights Reserved