இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற அப்ரிலியா மாடல்களில் விலை குறைந்த மாடலாக அப்ரிலியா ஸ்ட்ரோம் 125 ரூபாய் 65,000 என நிர்ணயம் செய்யப்பட உள்ளது. மேட் ஃபினிஷிங் செய்யப்பட்ட மஞ்சள், சிவப்பு மற்றும் கருப்பு என மூன்று நிறங்களில் கிடைக்க உள்ளது.
ஏப்ரல் மாத இறுதியில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஸ்ட்ரோம் 125-ல் விற்பனைக்கு கிடைக்கின் அப்ரிலியா எஸ்ஆர்125 மாடலில் உள்ள என்ஜின் பொருத்தபட்டிருக்கின்றது.
அப்ரிலியா ஸ்ட்ரோம் 125 சிறப்புகள்
விற்பனையில் உள்ள எஸ்ஆர் 125 பைக்கின் அடிப்படை அம்சங்களை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது . மேலும் இந்த ஸ்கூட்டரில் 12 அங்குல வீல் பெற்றுள்ளது. ஆனால் எஸ்ஆர் 125 மாடலில் 14 அங்குல வீல் கொண்டுள்ளது.
இந்த ஸ்கூட்டர் மாடலில் 120/80/12 (முன்புறம்) மற்றும் 130/80/12 (பின்புறம்) டயரினை கொண்டதாக அமைந்துள்ளது. மிகவும் ஸ்டைலிஷான கிராபிக்ஸ் பெற்றதாக ஸ்ட்ரோம் 125 விளங்க உள்ளது.
மூன்று வால்வுகளை கொண்ட ஏர்கூல்டு என்ஜின் பெற்ற 9.5 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 9.8 என்எம் முறுக்கு விசை வெளிப்படுத்தும் 124.49 சிசி என்ஜின் பெற்றிருக்கின்றது. இந்த ஸ்கூட்டரில் ஸ்ட்ரோம் 125-ல் சிபிஎஸ் பிரேக் பெற்றதாக இருக்கும்.
இந்தியாவில் அப்ரிலியா ஸ்ட்ரோம் 125 ரூபாய் 65,000 (விற்பனையக விலை) என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.