ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் ரிஸ்டா குடும்பங்களுக்கான மின்சார ஸ்கூட்டரில் கூடுதலாக S 3.7Kwh பேட்டரி பெற்ற வேரியண்ட் 159கிமீ ரேஞ்ச் கொண்டதாக ரூ.1,39,312 எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது.
முன்பாக 3.7Kwh பேட்டரி கொண்ட டாப் வேரியண்ட் ரிஸ்டா Z வேரிண்டில் மட்டும் கிடைத்து வந்த நிலையில் கூடுதலாக குறைந்த வசதிகள் கொண்ட வேரியண்டிலும் 159 கிமீ ரேஞ்ச் வழங்கும் மாடல் இடம்பெற்றிருக்கின்றது.
இந்த ஸ்கூட்டரில் டச் ஸ்கீரின் டிஸ்பிளே வழங்கப்படாமல் , 7-இன்ச் டீப்வியூ டிஸ்ப்ளே, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வசதியுடன் பாதுகாப்பிற்காக, ஸ்கூட்டரில் ஆட்டோஹோல்ட், ஃபால் சேஃப், எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல், டோ மற்றும் திருட்டு எச்சரிக்கை, ஃபைண்ட் மை ஸ்கூட்டர் மற்றும் அலெக்சா ஸ்கில்ஸ் ஆகியவை உள்ளன.
34 லிட்டர் பூட்ஸ்பேஸ் கொண்டு PMSM மோட்டார் ஆனது பெற்றுள்ள ரிஸ்டா 4.3KW பவர், 22Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிமீ மற்றும் 0-40 கிமீ வேகத்தை வெறும் 4.7 வினாடிகளில் எட்டுகின்றது. மற்றபடி மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அமைந்துள்ளது. சமீபத்தில் இந்த மாடல் விற்பனைக்கு வந்த குறைந்த நாட்களிலே 1லட்சம் இலக்கை கடந்தது.