பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 125cc பிரிவில் பல்சர் 125, பல்சர் என்எஸ் 125, மற்றும் CT 125X ஆகிய மூன்று மாடல்களின் என்ஜின், சிறப்புகள், மைலேஜ் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.
125cc சந்தையில் உள்ள ஹோண்டா ஷைன் 125, எஸ்பி 125, ஹீரோ கிளாமர் 125, சூப்பர் ஸ்பிளெண்டர், டிவிஎஸ் ரைடர் 125 ஆகிய மாடல்களுடன் நேரடியாக சந்தையை பகிர்ந்து கொள்ளுகின்றது.
2023 Bajaj CT 125X
பட்ஜெட் விலையில் கிடைக்கின்ற 125cc பைக் மாடல்களில் ஒன்றான சிடி 125 எக்ஸ் டிஸ்க் மற்றும் டிரம் என இரு விதமான வேரியண்டில் கருப்பு நிறத்தின் அடிப்படையில், பச்சை, சிவப்பு மற்றும் நீலம் என மூன்று விதமான பாடி கிராபிக்ஸ் பெற்றுள்ளது.
வட்ட வடிவத்தை பெற்ற ஹெட்லைட், ரெட்ரோ மாடல்களை நினைவுப்படுத்துகின்ற டிசைன் வடிவமைப்பினை பெற்ற CT125 X பைக்கில் 124.4cc அதிகபட்சமாக 10.9 bhp பவர் 11 Nm டார்க் வழங்குகின்றது. இந்த பைக்கில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட டபூள் கார்டிள் சேஸ் கொடுக்கப்பட்டு 17 இன்ச் வீல் கொடுக்கப்பட்டுள்ள 125 எக்ஸ் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் டூயல் ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டுள்ளது.
பஜாஜ் CT 125X பைக் விலை ரூ 74,240 முதல் ரூ.77,440 (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு)
Bajaj CT 125 X | |
Engine Displacement (CC) | 124.4 cc Air-cooled |
Power | 10.9 hp @ 8500 rpm |
Torque | 11 Nm @ 7,500 rpm |
Gear Box | 5 Speed |
2023 பஜாஜ் CT 125X பைக்கின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை
CT 125X Drum – ₹ 88,780
CT 125X Disc – ₹ 92,670
2023 Bajaj Pulsar NS125
ஸ்போர்ட்டிவ் மாடலாக கிடைக்கின்ற பல்சர் என்எஸ் 125 பைக்கில் ஆரஞ்சு, சிவப்பு, நீலம் மற்றும் கிரே என நான்கு நிறங்களை பெற்றுள்ளது. மிகவும் நேர்த்தியான வடிவமைப்பினை பெற்று இரு பிரிவுகள் பெற்ற இருக்கையுடன் விளங்குகின்றது.
பல்சர் என்எஸ் 125 பைக்கில் 124.45cc அதிகபட்சமாக 11.9 bhp பவர் 11 Nm டார்க் வழங்குகின்றது. இந்த பைக்கில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட டபூள் கார்டிள் சேஸ் கொடுக்கப்பட்டு 80/100-17 மற்றும் 100/90-17 இன்ச் வீல் கொடுக்கப்பட்டுள்ள என்எஸ் 125 முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் டூயல் ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டுள்ளது. 240mm டிஸ்க் மற்றும் 130 mm டிரம் பிரேக் உடன் சிபிஎஸ் அமைப்பை கொண்டுள்ளது.
பஜாஜ் பல்சர் NS125 பைக் விலை ரூ.1,07,482 (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு)
Bajaj Pulsar NS 125 | |
Engine Displacement (CC) | 124.45 cc Air-cooled |
Power | 11.9 hp @ 8500 rpm |
Torque | 11 Nm @ 7500 rpm |
Gear Box | 5 Speed |
2023 பஜாஜ் பல்சர் NS125 பைக்கின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 1,28,680
2023 Bajaj Pulsar 125
பழைய வடிவமைப்பினை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ள பஜாஜ் பல்சர் 125 பைக்கில் 124.45cc அதிகபட்சமாக 11.9 bhp பவர் 11 Nm டார்க் வழங்குகின்றது. இந்த பைக்கில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட டபூள் கார்டிள் சேஸ் கொடுக்கப்பட்டு 80/100-17 மற்றும் 100/90-17 இன்ச் வீல் கொடுக்கப்பட்டுள்ள பல்சர் 125 முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் டூயல் ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டுள்ளது. 240mm டிஸ்க் மற்றும் 130 mm டிரம் பிரேக் உடன் சிபிஎஸ் அமைப்பை கொண்டுள்ளது.
கார்பன் ஃபைபர் வேரியண்டில் ஒற்றை இருக்கை மற்றும் ஸ்பிளிட் இருக்கை அடுத்து, நியோன் வேரியண்டில் மூன்று நிறங்கள் என ஒட்டுமொத்தமாக 6 நிறங்களை பெற்றதாக விற்பனை செய்யப்படுகின்றது.
பஜாஜ் பல்சர் 125 பைக் விலை ரூ.86,022 (Neon Single Seat), ரூ.94,195 (Carbon Fibre Single Seat) மற்றும் ரூ.96,582 (Carbon Fibre Split Seat) (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு)
Bajaj Pulsar NS 125 | |
Engine Displacement (CC) | 124.45 cc Air-cooled |
Power | 11.9 hp @ 8500 rpm |
Torque | 11 Nm @ 7500 rpm |
Gear Box | 5 Speed |
2023 பஜாஜ் பல்சர் 125 பைக்கின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை
Pulsar 125 Neon Single Seat – ₹ 1,04,560
Pulsar 125 Carbon Fibre Single Seat – ₹ 1,12,980
Pulsar 125 Carbon Fibre Split Seat – ₹ 1,17,070
அனைத்து ஆன்-ரோடு விலை பட்டியலும் தமிழ்நாட்டின் தோராயமானதாகும்.. எனவே விலை விபரம் டீலர்களுக்கு டீலர் மாறுபடும்.. துல்லியமான விலையை அறிய டீலரை அனுகுங்கள்.
0