Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

125CC பைக்குகளின் ஆன்ரோடு விலை பட்டியல் – பிப்ரவரி 2023

by automobiletamilan
February 22, 2023
in பைக் செய்திகள்

இந்திய சந்தையில் விற்பனையில் கிடைக்கின்ற 125cc பைக்குகளில் மிக சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ள மாடல்களின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம். ஸ்கூட்டர்களை தவிர்த்து பைக்குகள் மட்டும் இங்கு பட்டியிலடப்பட்டுள்ளது.

பஜாஜ் பல்சர் 125, கேடிஎம் டியூக் 125, கேடிஎம் ஆர்சி 125, ஹீரோ கிளாமர், ஹோண்டா ஷைன், ஹோண்டா SP 125, டிவிஎஸ் ரைடர், பஜாஜ் சிடி 125 எக்ஸ், கீவே எஸ்ஆர் 125 மற்றும் ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் போன்ற 125cc பைக்குகளின் என்ஜின் மற்றும் மைலேஜ் உட்பட தமிழ்நாடு ஆன்-ரோடு விலை பட்டியலை இங்கே காணலாம்.

கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆன்-ரோடு விலை பட்டியலும் தமிழ்நாட்டின் தோராயமானதாகும்.. எனவே விலை விபரம் டீலர்களுக்கு டீலர் மாறுபடும்.. துல்லியமான விலையை அறிய டீலரை அனுகுங்கள்.

Table of Contents

  • 2023 Bajaj Pulsar 125 Price
  • 2023 TVS Raider Price
  • 2023 Bajaj Pulsar NS125 Price
  • 2023 Honda CB Shine & SP 125 price
  • 2023 Hero Super Splendor price
  • 2023 Hero Glamour & Glamour Xtec Price
  • 2023 KTM 125 Duke Price
  • 2023 KTM RC125 Price
  • Bajaj CT 125X
  • Keeway SR 125

2023 Bajaj Pulsar 125 Price

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் பைக் வரிசையில் பல்சர் 125 மாடல் முன்னிலையாக உள்ளது. 125சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டு கார்பன் ஃபைபர் எடிசன் மற்றும் நியான் எடிசன் என இரண்டாக விற்பனை செய்யப்பட்டு ஒற்றை இருக்கை மற்றும் ஸ்பிளிட் இருக்கை என இரு ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

 

   Bajaj Pulsar 125
Engine Displacement (CC) 124.4 cc
Power ([email protected]) 11.8 PS @ 8500 rpm
Torque ([email protected]) 10.8 Nm @ 6500 rpm
Gear Box 5 Speed

2023 பஜாஜ் பல்சர் 125 பைக்கின் ஆன்ரோடு விலை ₹ 95,600 முதல் ₹ 1,09,500 வரை மாறுபடும்.

tvs-raider-bike

2023 TVS Raider Price

விற்பனைக்கு வந்த முதலே அமோகமான வரவேற்பினை பெற்ற ஸ்டைலிஷான டிவிஎஸ் ரைடர் 125சிசி பைக்கில் கனெக்ட்டிவிட்டி அம்சங்கள் சேர்க்கப்பட்டு பல்சர், கிளாமர் போன்ற மாடல்களுக்கு கடுமையான சவாலினை டிவிஎஸ் ஏற்படுத்தியுள்ளது.

   TVS Raider 125
Engine Displacement (CC) 125 cc air cooled
Power ([email protected]) 11.3 PS @ 7500 rpm
Torque ([email protected]) 11.2 Nm @ 6000 rpm
Gear Box 5 Speed

2023 டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் ஆன்ரோடு விலை ₹ 1,10,500 முதல் ₹ 1,25,500 வரை மாறுபடும்.

2023 Bajaj Pulsar NS125 Price

ஸ்டைலிஷான தோற்ற வடிவமைப்பினை கொண்ட பல்சர் என்எஸ் 125 பைக்கினை பொறுத்தவரை டிஸ்க் பிரேக் ஆப்ஷனை கொண்டு ஸ்பிளிட் இருக்கையுடன் 125சிசி என்ஜினை பெற்றுள்ளது.

   Bajaj Pulsar NS125
Engine Displacement (CC) 124.45 cc
Power ([email protected]) 12 PS @ 8500 rpm
Torque ([email protected]) 11 Nm @ 7000 rpm
Gear Box 5 Speed

2023 பஜாஜ் பல்சர் NS125 பைக்கின் ஆன்ரோடு விலை  ₹ 1,28,500 வரை.

2023 Honda CB Shine & SP 125 price

125சிசி சந்தையில் அதிகம் விற்பனை ஆகின்ற மாடல்களில் முதன்மையான இடத்தை தக்கவைத்து கொண்டுள்ள ஹோண்டா நிறுவனத்தின் சிபி ஷைன் பைக் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற கம்யூட்டர் மாடலாகும். இதன் அடிப்படையிலே சற்று ஸ்டைலிஷாக உருவாக்கப்பட்ட மாடல் ஹோண்டா SP 125 பைக்காகும். இரண்டும் ஒரே என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்றன. ஆனால் தோற்ற அமைப்பில் சில மாற்றங்களை பெற்றுள்ளன.

 

   Honda SP 125 & CB Shine
Engine Displacement (CC) 123.94 cc Air-cooled
Power ([email protected]) 10.8 PS @ 7500 rpm
Torque ([email protected]) 11 Nm @ 6000 rpm
Gear Box 5 Speed

2023 ஹோண்டா SP125 பைக்கின் ஆன்ரோடு விலை  ₹ 1,04,500 முதல் ₹ 1,08,200 வரை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

2023 ஹோண்டா CB Shine 125 பைக்கின் ஆன்ரோடு விலை  ₹ 98,305 முதல் ₹ 1,04,900 வரை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

2023 Hero Super Splendor price

நீண்ட காலமாக விற்பனையில் உள்ள ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பைக்கில் 125சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டு டிஸ்க் மற்றும் டிரம் பிரேக் என இரு ஆப்ஷன்களையும் பெற்று விற்பனைக்கு கிடைக்கின்றது.

   Hero Super Splendor 125
Engine Displacement (CC) 124.7 cc
Power ([email protected]) 10.8 PS @ 7500 rpm
Torque ([email protected]) 10.6 Nm @ 6000 rpm
Gear Box 5 Speed

2023 ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் 125 பைக்கின் ஆன்ரோடு விலை  ₹ 93,705 முதல் ₹ 1,02,900 வரை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

2023 Hero Glamour & Glamour Xtec Price

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கிளாமர் பைக்கில் கிளாமர், கிளாமர் எக்ஸ்டெக், கிளாமர் கேன்வாஸ் என மூன்று விதமாக கிடைக்கின்றது. கிளாமர் Xtec வேரியண்டில் கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை ஹீரோ வழங்குகின்றது. பொதுவாக இந்த மூன்று மாடல்களிலும் ஒரே என்ஜின் பயன்படுத்தப்படுகின்றது.

   Hero Glamour 125
Engine Displacement (CC) 124.7 cc
Power ([email protected]) 10.8 PS @ 7500 rpm
Torque ([email protected]) 10.6 Nm @ 6000 rpm
Gear Box 5 Speed

2023 ஹீரோ கிளாமர், கிளாமர் Xtec, கிளாமர் கேன்வாஸ் மாடல்கள் ஆன்ரோடு விலை ₹ 94,200 முதல் ₹ 1,13,000 வரை விற்பனை செய்யப்படுகின்றது.

2023 KTM 125 Duke Price

125சிசி சந்தையில் கிடைக்கின்ற ஸ்டைலிஷான மற்றும் பவர்ஃபுல்லான ஸ்போர்ட்டிவ் பைக் மாடலாக கேடிஎம் நிறுவனத்தின் 125 டியூக் விளங்குகின்றது. குறைந்த விலையில் டியூக் பைக் வாங்க விரும்புபவர்களுக்கு ஏற்றதாக கேடிஎம் நிறுவனம் விற்பனை செய்து வருகின்றது.

   KTM 125 Duke
Engine Displacement (CC) 124.7 cc liquid-cooled DOHC
Power ([email protected]) 14.5 PS @ 9250 rpm
Torque ([email protected]) 12 Nm @ 8000 rpm
Gear Box 5 Speed

2023 KTM 125 டியூக் பைக்கின் ஆன்ரோடு விலை ₹ 2,05,033 ஆகும்.

2023 KTM RC125 Price

இந்தியாவின் 125சிசி சந்தையில் ஃபேரிங் செய்யப்பட்ட மாடலாக விற்பனை செய்யப்படுகின்ற ஆர்சி 125 பைக்கின் எடை 160 கிலோ ஆகும். டியூக் 125 மற்றும் ஆர்சி 125 ஒரே என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்றன.

   KTM RC125
Engine Displacement (CC) 124.7 cc liquid-cooled DOHC
Power ([email protected]) 14.5 PS @ 9250 rpm
Torque ([email protected]) 12 Nm @ 8000 rpm
Gear Box 5 Speed

2023 KTM RC125 பைக்கின் ஆன்ரோடு விலை ₹ 2,18,533 ஆகும்.

Bajaj CT 125X

இந்தியாவில் குறைந்த விலை 125சிசி என்ஜின் கொண்ட மாடலாக விளங்கும் பஜாஜ் CT 125X பைக்கின் தோற்றம் ரெட்ரோ நினைவுகளை மீட்கும் வகையில் அமைந்திருக்கின்றது. டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் என இரு ஆப்ஷனையும் பெற்றிருக்கின்றது.

 

   2023 Bajaj CT 125X
Engine Displacement (CC) 124.4 cc
Power ([email protected]) 10.9 PS @ 8000 rpm
Torque ([email protected]) 11 Nm @ 5500 rpm
Gear Box 5 Speed

2023 பஜாஜ் CT 125X பைக்கின் ஆன்ரோடு விலை ₹ 92,500 முதல் ₹ 96,500 வரை ஆகும்.

Keeway SR 125

125சிசி சந்தையில் ரெட்ரோ ஸ்டைலை பெற்ற மாடலாக விளங்கும் 2023 கீவே எஸ்ஆர் 125 பைக்கில் வட்ட வடிவ ஹெட்லைட்கொண்டு ரெட்ரோ நிறங்கள் பயன்படுத்தப்பட்டு 125சிசி சந்தையில் கிடைக்கின்றது.

   Keeway SR 125
Engine Displacement (CC) 125 cc Air-cooled SOHC
Power ([email protected]) 9.7 Ps @ 9000 RPM
Torque ([email protected]) 8.2 Nm @ 7500 RPM
Gear Box 5 Speed

2023 கீவே SR 125 பைக்கின் ஆன்ரோடு விலை ₹ 1,36,233 ஆகும்.

Tags: Bajaj CT 125XBajaj Pulsar 125Bajaj Pulsar NS 125Hero GlamourHero super splendorHonda CB ShineHonda SP125KTM 125 DukeKTM RC 125TVS Raider
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version