வரும் ஜூலை 5 ஆம் தேதி உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார்சைக்கிளை ஃபிரீடம் 125 (Bajaj Freedom CNG) என்ற பெயரில் விற்பனைக்கு வெளியிட உள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பெட்ரோல் மாடல்களை விட 50-60 % கூடுதல் மைலேஜ் வழங்கும் என தெரிவித்துள்ளது.
ராஜீவ் பஜாஜ் தொடர்ந்து தன்னுடைய பேட்டிகளில் சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் பஜாஜின் பைக் பற்றி தொடர்ந்து பல்வேறு தகவல்களை வெளியிட்டிருந்த வந்த நிலையில் ப்ரூஸர் (Codename: Bruzer) என்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் முதல் சிஎன்ஜி மாடல் 125சிசி என்ஜினை பெற்றதாக வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டபூள் கார்டிள் ஃபிரேம் பெற்றுள்ள இந்த பைக்கில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு பெட்ரோல் டேங்க் மற்றும் இருக்கையின் அடிப்பகுதியில் சிஎன்ஜி எரிபொருள் கலனை நிறுவபட்டிருக்கும் என்பதனால் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் எந்தவொரு தயக்கமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது.
தொடர்ந்து சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வந்த சிஎன்ஜி தொடர்பான பைக்குகளில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரை பெற்றுள்ளது. குறிப்பாக ஒரு சில மாடல்களில் வித்தியாசமான ஹெட்லைட் அமைப்பு கொண்டிருந்தது. பஜாஜின் சிஎன்ஜி மாடலில் முன்புறத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் கொடுக்கப்பட்டு கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் பெற்றிருப்பதனால் 125சிசிக்கு குறைந்த திறன் பெற்ற என்ஜினாக இருக்கலாம்.
ஜூலை 5 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள பஜாஜ் ஆட்டோவின் ஃப்ரீடம் சிஎன்ஜி பைக்கின் விலை ரூ.1.50 லட்சத்துக்குள் துவங்கலாம்.
ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…
கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…
கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…
டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…