பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வெளியிட உள்ள உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார்சைக்கிளின் ஃப்ரீடம் 125 நாளைக்கு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் அதிகாரப்பூர்வமாக பெயரை டீசரை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த பெயரை நாம் சில நாட்களுக்கு முன்பாக உறுதிப்படுத்தியிருந்தோம்.
125சிசி என்ஜின் பொருத்தப்பட்டு பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டு பயன்முறையிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள மாடல் மைலேஜ் அதிகபட்சமாக 1 கிலோ சிஎன்ஜி எரிபொருளுக்கு 100 கிமீ வரை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது. மிகவும் மாறுபட்ட டிசைன் வடிவமைப்பினை பெற உள்ள மாடலில் வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட், தட்டையான மற்றும் நீளமான இருக்கை அமைப்பினை பெற்றுள்ளது.
டீயூப்லெர் ஸ்டீல் கார்டிள் ஃபிரேமில் வடிவமைக்கப்பட்டு பெட்ரோல் டேங்கிற்கு கீழ் பகுதியில் சிஎன்ஜி சிலிண்டர் பொருத்தப்பட்டு மிகவும் பாதுகாப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய சந்தையில் பரவலாக சிஎன்ஜி நிரப்பும் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகின்றது.
சிஎன்ஜி கார்களின் விற்பனை இந்திய சந்தையில் அதிகரித்து வருவதனால், போதிய வரவேற்பினை பயன்படுத்திக் கொண்டு பஜாஜ் ஆட்டோ உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார்சைக்கிளை வெளியிடுகின்றது.
காற்றை விட லேசான எடையை கொண்டுள்ள Compressed Natural Gas வெளியேறினால் உடனடியாக காற்றில் கரைந்து விடும் என்பதனால் ஆபத்து குறைவானதாகும். மேலும் தீப்பற்றக் கூடிய (ignition temperature) வெப்பநிலை 540 டிகிரி செல்சியஸ் ஆகும். ஆனால் சிஎன்ஜி சிலிண்டரை ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கு ஒருமுறை hydro testing செய்வது மிகவும் கட்டாயமாகும்.
பெட்ரோல், டீசலை விட மிகக் குறைவான மாசு உமிழ்வை வெளிப்படுத்துவனால் சுற்றுச்சூழலை பாதுகாக்க வழி சிஎன்ஜி வகுக்கின்றது. நிறமற்றது, மணமற்றது, நச்சுத்தன்மையற்றதாக விளங்குகின்ற அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் மீத்தேன் (CH4) 80-90 % வரை உள்ளது. இந்தியாவில் சிஎன்ஜி கசிவு ஏற்பட்டாலும், எல்பிஜியில் உள்ளதை போன்ற வாசனையை வெளிப்படுத்தும் வகையிலான வாசனை திரவம் சேர்க்கப்பட்டுள்ளது.
சிஎன்ஜி எரிபொருளை சேமிக்க 200-248 பார் அழுத்தம் கொண்ட கடினமான, உருளை அல்லது கோள வடிவ உருளையை பயன்படுத்தப்படுகின்றது.
ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…
கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…
கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…
டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…