Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

95 கிமீ ரேஞ்சு.. ஒரு லட்சம் ரூபாயில் வந்த பஜாஜ் சேட்டக் மின்சார ஸ்கூட்டர் சிறப்புகள்

By MR.Durai
Last updated: 14,January 2020
Share
SHARE

bajaj chetak

பஜாஜ் ஆட்டோவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக வந்துள்ள சேட்டக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் பல்வேறு முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம். சேட்டகின் விலை மற்றும் முழுமையான நுட்ப விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

இந்நிறுவனத்தின் ஆரம்பகாலத்தை ஏற்படுத்தி கொடுத்த ஐசி என்ஜின் பெற்ற சேட்டக் ஸ்கூட்டரை மீண்டும் 14 ஆண்டுகளுக்கு பிறகு பஜாஜின் அர்பனைட் பிராண்டில் வெளியிட்டு முதல் ஸ்கூட்டரில் மின்சாரத்தில் இயங்கும் வகையில் வடிவமைத்துள்ளது. சேட்டக் ஸ்கூட்டரின் குறிப்பிடதக்க ஸ்டைலிங் அம்சங்களாக பக்கவாட்டு பேனல் மற்றும் கிளஸ்ட்டர் உட்பட சிலவற்றின் உந்துதலை தற்பொழுதும் பெற்றிருந்தாலும், இது பியாஜியோ நிறுவனத்தின் வெஸ்பா ஸ்கூட்டர்களின் தோற்றத்தை நினைவுப்படுத்துகின்றது.

சேட்டக் ஸ்டைல்

ரெட்ரோ ஸ்டைலில் நவீனத்துவமான பல்வேறு வசதிகளை வழங்கி மிக சிறப்பான முறையில் உருவாக்கி முதல் பார்வையிலே கவரும் வகையில் பஜாஜ் வடிவமைத்துள்ளது. எந்தவொரு பாடி கிராபிக்ஸ் ஸ்டிக்கிரிங் வேலைப்பாடுகள் இல்லாமல் மெட்டல் பேனல்களை கொண்டு நேர்த்தியாக வடிவமைத்து சேட்டக் இ-ஸ்கூட்டரில் கருப்பு, சிவப்பு, ப்ளூ, வெள்ளை, பீஜ் மற்றும் சில்வர் என 6 விதமான கிளாசிக் நிறங்களை இணைத்துள்ளது.

bajaj chetak

குதிரை லாடத்தினை நினைவுப்படுத்துகின்ற எல்இடி ரன்னிங் விளக்குடன் கூடிய வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட் பெற்று அப்ரானில் எல்இடி டர்ன் இன்டிகேட்டர் கொண்டுள்ளது. வட்ட வடிவ டிஜிட்டல் இண்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் பல்வேறு நவீன வசதிகளுடனும், இந்த ஸ்கூட்டரின் சுவிட்சுகள் நேர்த்தியான கருமை நிறத்தில் கொண்டுள்ளது. முன்புற அப்ரானில் பொருட்களை வைப்பதற்கு க்ளோவ் பாக்ஸ், இருக்கையின் அடியில் சிறப்பான ஸ்டோரேஜ் உட்பட பக்கவாட்டு பேனல்கள் மற்றும் பின்புற அமைப்பு எல்இடி டெயில்லைட் மற்றும் இன்டிகேட்டரை கொண்டுள்ளது.

 

bajaj chetak headlight

 சேட்டக்கின் நுட்பங்கள்

ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி ஆதரவை கொண்ட வட்ட வடிவ TFT டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் சேட்டக் ஆப் வாயிலாக இணைப்பினை ஸ்மார்ட்போன் மூலம் ஏற்படுத்திக் கொள்ளலாம்.  இதன் மூலம் அழைப்புகள், எஸ்எம்எஸ், டர்ன் பை டர்ன் நேவிகேஷன் உட்பட அடிப்படையான பேட்டரி ரேஞ்சு, கடிகாரம், சர்வீஸ் இன்டிகேட்டர், ஸ்பீடு போன்றவற்றை அறியலாம்.

சேட்டக் ஆப் வாயிலாக ஓட்டுதலின் திறன்களை கண்காணிக்க இயலும். இதன் மூலம் ரைடிங் தன்மையை மாற்றிக் கொள்வதுடன் ரேஞ்சு விபரங்களை துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.

bajaj chetak cluster

சேடக் ஸ்கூட்டரில் 4 கிலோ வாட் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டு தூசு மற்றும் நீரினால் எவ்வித பாதிப்பு ஏற்படாத IP67 சான்றிதழ் பெற்ற உயர்தரமான லித்தியம் அயன் பேட்டரியுடன் நிக்கல் கோபாலட் அலுமினியம் ஆக்ஸைடு (Nickel Cobalt Aluminium Oxide -NCA) செல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பேட்டரியை நீக்கும் வகையில் வழங்கப்படவில்லை.

இந்த ஸ்கூட்டரினை பேட்டரியை 5-15 ஆம்ப் மின்சாரத்தின் மூலம் சார்ஜ் செய்வதற்கான அம்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆன்-போர்டு நுண்ணறிவு பேட்டரி மேலாண்மை அமைப்பு (Intelligent Braking Management System- IBMS) மற்றும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் (regenerative braking) சிஸ்டத்தை கூடுதலாக பெற்றுள்ளது.

சஸ்பென்ஷனை பொருத்தவரை முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறத்தில் ஒன் சைடேட் ஸ்பீரிங் செட்டப் சஸ்பென்ஷனும், 12 அங்குல கேஸ்ட் அலாய் வீல் பெற்ற இந்த ஸ்கூட்டரில், முன்பக்க டயரில் டிஸ்க் பிரேக், பின்புறத்தில் டிரம் பிரேக் வழங்க்கப்பட்டு சிபிஎஸ் பிரேக் இணைக்கப்படலாம். மேலும் 90/90 எம்.ஆர்.எஃப் ஜேப்பர் கே டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

வாரண்டி

சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெற உள்ள பேட்டரி மற்றும் மோட்டாருக்கு 3 வருட வாரண்டி அல்லது 50,000 கிமீ வழங்கப்படவும், பேட்டரியின் ஆயுள் 70,000 கிமீ ஆக விளங்க உள்ளது. முதல் மூன்று இலவச சர்வீஸ் உடன் மேலும், ஒவ்வொரு 12,000 கிமீ ஒரு முறை சர்வீஸ் மேற்கொள்ளப்பட வேண்டும்.

fb665 bajaj chetak rear wheel

சேட்டக் ஸ்கூட்டரின் ரேஞ்சு

சேட்டக் ஸ்கூட்டரில் ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் என இரண்டு ரைடிங் மோடுகள் மற்றொரு ரிவர்ஸ் அசிஸ்ட் மோடும் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 60 கிமீ வேகத்தில் பயணிக்கின்ற ஸ்போர்ட் மோட் மூலம் 85 கிமீ பயண தூரத்தையும், அதுவே ஈக்கோ மோட் மூலம் 45-50 கிமீ வேகத்தில் பயணித்தால் 95 – 100 கிமீ வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டர் ரேஞ்சு 120 கிமீ ஆக அறிமுகம் செய்யப்படலாம்.

இந்த ஸ்கூட்டரின் பேட்டரியை சார்ஜிங் செய்ய நான்கு முதல் ஐந்து மணி நேரம் தேவைப்படும்.

bajaj chetak side

போட்டியாளர்கள்

சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக ஏத்தர் 450, ஓகினாவா பிரைஸ் சீரிஸ் மற்றும் வரவிருக்கும் டிவிஎஸ் க்ரியோன் போன்ற மாடல்கள் விளங்க உள்ளது.

bajaj chetakchetak rear

 

விற்பனை விவரம்

சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை என்பது ஆன்லைன் வழியாக மட்டுமே மேற்கொள்ளப்பட உள்ளது. அனைத்து விதமான முறைகளும் வீட்டிலிருந்தபடி மேற்கொண்டு சேட்டக்கை டெலிவரி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டருக்கு வழங்கப்படுகின்ற சார்ஜர் இலவசமாக வழங்கப்படுவதுடன், வீட்டில் இந்நிறுவன ஊழியரே வந்து பொருத்தி தருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 15,  பகல் 12 மணி முதல் சேட்டக் முன்பதிவு பெங்களூரு மற்றும் புனே நகரங்களில் ஆன்லைன் வழியாக ரூ.2,000 செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். இந்த ஸ்கூட்டருக்கு என 13 டீலர்கள் பெங்களூருவிலும் , 3 டீலர்கள் புனேவிலும் இடம்பெற்றுள்ளது. இந்த மாடல் டெலிவரி பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட உள்ளது.

சேத்தக் வேரியண்ட் விபரம்

பிரீமியம் மாடலில் கூடுதலாக மெட்டாலிக் வண்ண விருப்பங்கள், டேன் மற்றும் லைட் டேன் நிறத்திலான இருக்கை, மெட்டாலிக் நிற சக்கரங்கள் மற்றும் முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக் கிடைக்கிறது. அர்பன் மாடல், மெட்டாலிக் நிறங்கள் அல்லாமல், டிரம் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.

சேட்டக் எல்க்ட்ரிக் ஸ்கூட்டர் விலை

அர்பேன் மற்றும் பீரிமியம் என இரு வேரியண்டுகளில் கிடைக்கின்றது.

சேட்டக் அர்பேன் – ரூ.1.00 லட்சம்

சேட்டக் பிரீமியம் – ரூ.1.15 லட்சம்

(எக்ஸ்ஷோரூம் புனே மற்றும் பெங்களூரு)

[youtube https://www.youtube.com/watch?v=jVm6SSYLbLM]

f921b bajaj chetak electric 1fa297 bajaj chetak fr பஜாஜ் சேட்டக்

best 125cc bikes
125சிசி பைக் சந்தையில் ஹோண்டா, ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ்
ஹீரோவின் கிளாமர் X பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள்
ஹீரோ கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார்.?
இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸ் கண்ட்ரோல் ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 சிறப்புகள்
ஏதெரின் பட்ஜெட் விலை EL எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியானது
TAGGED:bajaj autoBajaj ChetakBajaj Urbanite Chetak
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
KTM 160 Duke onroad price
KTM bikes
கேடிஎம் 160 டியூக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
2023 hero Super Splendor xtech Bike
Hero Motocorp
ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர், Xtech பைக்கின் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
ஓலா எஸ்1 புரோ + இ-ஸ்கூட்டர்
Ola Electric
ஓலா S1 Pro+ எலக்ட்ரிக் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள், சிறப்புகள்
xtreme 200s 4v
Hero Motocorp
2023 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S 4V பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved