பஜாஜ் ஆட்டோவின் மின்சார ஸ்கூட்டர் மாடலாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள சேட்டக் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூபாய் 1.00 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. முழுமையான சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 95 கிமீ ரேஞ்சை வழங்குவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கேடிஎம் நிறுவனத்தின் புரோ பைக்கிங் டீலர்கள் வாயிலாக புனே மற்றும் பெங்களூரு நகரங்களில் விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ள சேட்டக்கினை பொறுத்தவரை ரெட்ரோ ஸ்டைலை பெற்று அசத்தலான டிஜிட்டல் சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளதால் இளைய தலைமுறையினர் மத்தியில் சிறப்பான வரவேற்பினை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
4 கிலோ வாட் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டு தூசு மற்றும் நீரினால் எவ்வித பாதிப்பு ஏற்படாத IP67 சான்றிதழ் பெற்ற உயர்தரமான லித்தியம் அயன் பேட்டரியுடன் நிக்கல் கோபாலட் அலுமினியம் ஆக்ஸைடு (Nickel Cobalt Aluminium Oxide -NCA) செல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பேட்டரியை நீக்கும் வகையில் வழங்கப்படவில்லை.
இந்த ஸ்கூட்டரினை பேட்டரியை 5-15 ஆம்ப் மின்சாரத்தின் மூலம் சார்ஜ் செய்வதற்கான அம்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆன்-போர்டு நுண்ணறிவு பேட்டரி மேலாண்மை அமைப்பு (Intelligent Braking Management System- IBMS) மற்றும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் (regenerative braking) சிஸ்டத்தை கூடுதலாக பெற்றுள்ளது.
சேட்டக் மின் ஸ்கூட்டரை 5 மணி நேரத்தில் முழுமையான சார்ஜிங் பெறக்கூடிய 3.4 கிலோ வாட் ஹவர் லித்தியம் ஐயன் பேட்டரியை கொண்டுள்ள சேட்டக்கில் 80 சதவீத சார்ஜிங்கை 3 மணி நேரம் 50 நிடங்களில் பெற இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 16 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 4 கிலோ வாட் எலெக்ட்ரிக் மோட்டார் பெற்றுள்ள இந்த மாடல் முழுமையான 100 சதவீத சார்ஜ் உள்ள சமயத்தில் ஈக்கோ மோடில் பயணித்தால் 95 கிமீ ரேஞ்சு வழங்கும் என இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சஸ்பென்ஷனை பொறுத்தவரை, முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறத்தில் ஒன் சைடேட் ஸ்பீரிங் செட்டப் சஸ்பென்ஷனும், 12 அங்குல கேஸ்ட் அலாய் வீல் பெற்ற இந்த ஸ்கூட்டரில், முன்பக்க டயரில் டிஸ்க் பிரேக், பின்புறத்தில் டிரம் பிரேக் வழங்க்கப்பட்டு சிபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் 90/90 எம்.ஆர்.எஃப் ஜேப்பர் கே டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டருக்கு என பிரத்தியேக ஸ்மார்ட்போன் ஆப் வழங்கப்பட்டு அதன் மூலமாக சார்ஜிங் இருப்பு, இருக்குமிடம் உட்பட அனைத்தையும் ஆப் மூலமாக அறிந்து கொள்ளலாம். மிக கடுமையான நெரிசல் மிகுந்த இடத்தில் இலகுவாக பார்க்கிங் செய்வதற்காக ரிவர்ஸ் கியர் மோட் வழங்கப்பட்டுள்ளது.
வாரண்டி
சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெற உள்ள பேட்டரி மற்றும் மோட்டாருக்கு 3 வருட வாரண்டி அல்லது 50,000 கிமீ வழங்கப்படவும், பேட்டரியின் ஆயுள் 70,000 கிமீ ஆக விளங்க உள்ளது. முதல் மூன்று இலவச சர்வீஸ் உடன் மேலும், ஒவ்வொரு 12,000 கிமீ ஒரு முறை சர்வீஸ் மேற்கொள்ளப்பட வேண்டும்.
விற்பனை விவரம்
சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை என்பது ஆன்லைன் வழியாக மட்டுமே மேற்கொள்ளப்பட உள்ளது. அனைத்து விதமான முறைகளும் வீட்டிலிருந்தபடி மேற்கொண்டு சேட்டக்கை டெலிவரி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டருக்கு வழங்கப்படுகின்ற சார்ஜர் இலவசமாக வழங்கப்படுவதுடன், வீட்டில் இந்நிறுவன ஊழியரே வந்து பொருத்தி தருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 15, பகல் 12 மணி முதல் சேட்டக் முன்பதிவு பெங்களூரு மற்றும் புனே நகரங்களில் ஆன்லைன் வழியாக ரூ.2,000 செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். இந்த ஸ்கூட்டருக்கு என 13 டீலர்கள் பெங்களூருவிலும் , 3 டீலர்கள் புனேவிலும் இடம்பெற்றுள்ளது. இந்த மாடல் டெலிவரி பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட உள்ளது.
சேத்தக் வேரியண்ட் விபரம்
பிரீமியம் மாடலில் கூடுதலாக மெட்டாலிக் வண்ண விருப்பங்கள், டேன் மற்றும் லைட் டேன் நிறத்திலான இருக்கை, மெட்டாலிக் நிற சக்கரங்கள் மற்றும் முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக் கிடைக்கிறது. அர்பன் மாடல், மெட்டாலிக் நிறங்கள் அல்லாமல், டிரம் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.
சேட்டக் எல்க்ட்ரிக் ஸ்கூட்டர் விலை
அர்பேன் மற்றும் பீரிமியம் என இரு வேரியண்டுகளில் கிடைக்கின்றது.
சேட்டக் அர்பேன் – ரூ.1.00 லட்சம்
சேட்டக் பிரீமியம் – ரூ.1.15 லட்சம்
(எக்ஸ்ஷோரூம் புனே மற்றும் பெங்களூரு)
பேட்டரி – 3 Kwh
மோட்டார் – 4 Kwh
சார்ஜிங் நேரம் – 5 மணி நேரம் (25 % 1 மணி நேரத்தில்)
ஈக்கோ மோட் – 95 கிமீ ரேஞ்சு
ஸ்போர்ட் மோட் – 85 கிமீ ரேஞ்சு
பேட்டரிக்கு ஆயுள் – 70,000 கிமீ
வாரண்டி – 3 வருடம் அல்லது 50,000 கிமீ
சர்வீஸ் – 12,000 கிமீ
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…
ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…
கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…
ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…
துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…