Categories: Bike News

பஜாஜ் சேட்டக் பிரீமியம் Vs சேட்டக் அர்பேன் – எது பெஸ்ட் சாய்ஸ்

chetak

பஜாஜின் புதிய மின்சார ஸ்கூட்டர் மாடலாக வெளிவந்துள்ள ரெட்ரோ ஸ்டைலை பெற்ற நவீனத்துவமான சேட்டக் மாடலில் இரண்டு விதமான வேரியண்டுகள் இடம்பெற்றுள்ளது. அவை அர்பென் மற்றொன்று பிரீமியம் ஆகும்.

இரண்டிலும் ஒரே மாதிரியான எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி பயன்படுத்துப்பட்டுள்ளது. குறிப்பாக தோற்ற அமைப்பு, நிறங்கள் மற்றும் பிரேக்கிங் செட்டப் போன்றவற்றில் மட்டுமே மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

சேட்டக் மின்  ஸ்கூட்டரை 5 மணி நேரத்தில் முழுமையான சார்ஜிங் பெறக்கூடிய 3.4 கிலோ வாட் ஹவர் லித்தியம் ஐயன் பேட்டரியை கொண்டுள்ள சேட்டக்கில் 80 சதவீத சார்ஜிங்கை 3 மணி நேரம் 50 நிடங்களில் பெற இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 16 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 4 கிலோ வாட் எலெக்ட்ரிக் மோட்டார் பெற்றுள்ள இந்த மாடல் முழுமையான 100 சதவீத சார்ஜ் உள்ள சமயத்தில் ஈக்கோ மோடில் பயணித்தால் 95 கிமீ ரேஞ்சு வழங்கும் என இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

நிறங்கள்

முதலாவதாக, இரண்டும் தனித்தனி வண்ண விருப்பங்களில் கிடைக்கின்றன. அர்பேன் டிரிம் மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் பளபளப்பான பூச்சுடன் கிடைக்கின்றது. பிரீமியம் மாடல் நீல, கருப்பு, சிவப்பு மற்றும் ஹேசல் நட் உள்ளிட்ட நான்கு மெட்டாலிக் நிறத்தில் கிடைக்கிறது.

அர்பேன் மாடலில் இருக்கை கிரே நிறத்துடன் மற்றும் கருப்பு நிறம் ஃப்ளோர் மேட் பெற்றதாகவும், வீலில் மேட் கருப்பு நிறத்தை பெற்றுள்ளது.

பிரீமியம் வேரியண்டை பொறுத்த வரை இருக்கை பழுப்பு நிறத்துடன் மற்றும் டார்க் கிரே நிறம் ஃப்ளோர் மேட் பெற்றதாகவும், வீலில் மேட் கருப்பு நிறத்தை பெற்றுள்ளது.

பிரேக்கிங் செட்டப்

இரண்டு வகைகளுக்கு இடையிலான ஒரே மெக்கானிக்கல் வேறுபாடு பிரேக்கிங் அமைப்பில் உள்ளது. அர்பேன் மாடலில் டிரம் பிரேக் இரண்டு டயரிலும் பொருத்தப்பட்டிருக்கும். பிரீமியம் வேரியண்டில் முன்புறத்தில் மட்டும் டிஸ்க் பிரேக்கினை கொண்டுள்ளது. சேட்டக் 12 அங்குல வீலுடன் எம்.ஆர்.எஃப் ஜாப்பர் கே டயர்களைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் ஒற்றை சஸ்பென்ஷனும் மற்றும் பின்புறத்தில் ஒரு மோனோஷாக் மூலம் சொகுசு தன்மையை வழங்குகின்றது.

விலை

பஜாஜ் சேட்டக் அர்பேன் – ரூ.1 லட்சம்

பஜாஜ் சேட்டக் பிரீமியம் – ரூ. 1.15 லட்சம்

(எக்ஸ்ஷோரூம் பெங்களூரு, புனே)

வாரண்டி

சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெற உள்ள பேட்டரி மற்றும் மோட்டாருக்கு 3 வருட வாரண்டி அல்லது 50,000 கிமீ வழங்கப்படவும், பேட்டரியின் ஆயுள் 70,000 கிமீ ஆக விளங்க உள்ளது. முதல் மூன்று இலவச சர்வீஸ் உடன் மேலும், ஒவ்வொரு 12,000 கிமீ ஒரு முறை சர்வீஸ் மேற்கொள்ளப்பட வேண்டும்.

chetak-launched

ஜனவரி 15,  பகல் 12 மணி முதல் சேட்டக் முன்பதிவு பெங்களூரு மற்றும் புனே நகரங்களில் ஆன்லைன் வழியாக ரூ.2,000 செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். இந்த ஸ்கூட்டருக்கு என 13 டீலர்கள் பெங்களூருவிலும் , 3 டீலர்கள் புனேவிலும் இடம்பெற்றுள்ளது. இந்த மாடல் டெலிவரி பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட உள்ளது.

Recent Posts

ஆடம்பர கார்களுக்கு எம்ஜி செலக்ட் டீலரை துவங்கும் ஜேஎஸ்டபிள்யூ..!

ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…

15 hours ago

160கிமீ ரேஞ்ச் வழங்கும் 2024 ரிவோல்ட் RV400 அறிமுகமானது

ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…

20 hours ago

இந்தியாவில் ஹோண்டாவின் 300-350cc பைக்குகள் ரீகால் அழைப்பு

கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…

1 day ago

முதல் நாளில் 1,822 முன்பதிவுகளை அள்ளிய கியா கார்னிவல்..!

கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…

1 day ago

டிரையம்ப் ஸ்பீடு T4 Vs ஸ்பீடு 400 வித்தியாசங்கள் என்ன..!

டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…

2 days ago

ரூ.84,990 விலையில் ரிவோல்ட் RV1, RV1+ இ-பைக் விற்பனைக்கு அறிமுகமானது

ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…

2 days ago