Categories: Bike News

பஜாஜ் சேத்தக் ப்ளூ 3202 ஸ்கூட்டரின் சிறப்புகள்

bajaj chetak blue 3202

பஜாஜ் சேத்தக் அர்பேன் இ-ஸ்கூட்டருக்கு மாற்றாக புதிய சேத்தக் ப்ளூ 3202 அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது இதன் மூலம் கூடுதலான ரேஞ்ச் மற்றும் சிறப்பான வகையில் பல்வேறு வசதிகளை தொடர்ந்து பெற்றிருப்பதுடன் விலை ரூபாய் ₹8000 வரை குறைக்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் ஐக்யூப் மாடலுக்கு போட்டியாக சேத்தக் மிகச் சிறப்பான வளர்ச்சி அடைந்து வருகின்ற நிலையில் இரண்டு மாடல்களுக்கும் கடுமையான போட்டி உள்ள நிலையில் தொடர்ந்து பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சேத்தக் வரிசை புதுப்பித்து வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது மேம்படுத்தப்பட்ட பேட்டரி ரேஞ்ச் கொண்ட இந்த மாடலானது விற்பனைக்கு வெளியிடப்பட்டிருக்கின்றது.

குறிப்பாக முந்தைய பேட்டரியை விட தற்பொழுது மேம்பட்ட வகையில் திறன் வாய்ந்ததாகவும் அதே நேரத்தில் நுட்பம் சார்ந்த அடிப்படையான அம்சங்களில் எந்த மாற்றங்களும் ஏற்படுத்தப்படாமல் விளையும் ரூபாய் 8000 வரை குறைக்கப்பட்டுள்ளதால் நிச்சயமாக ஐகியூப் மாடல் மிகப்பெரிய சவாலினை எதிர்கொள்ளும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை.

முழுமையான ஸ்டீல் பாடி கொண்டுள்ள பஜாஜ் சேத்தக் ப்ளூ 3202 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் தற்பொழுது 3.2 KWh பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக மணிக்கு 73 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் கூடிய எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது. இந்த மாடலின் டெக்பேக் பெறாத வேரியண்ட் மணிக்கு 63 கிமீ வேகத்தில் பயணிக்கும் என குறிப்பிடப்படுகிறது.

இதில் டெக்பேக் கொண்ட மாடலில் ஈகோ மற்றும் ஸ்போர்ட்ஸ் என இரண்டு விதமான ரைடிங் மோடுகள் பெற்றிருக்கின்றது. இரு வேறுபட்ட மாடல்களும் பொதுவாக சிங்கிள் சார்ஜில் 137 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்கும் என இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது.

ப்ளூ 3202 மின்சார ஸ்கூட்டரில் வெள்ளை,கிரே, நீலம் மற்றும் கருப்பு பல நான்கு நிறங்களுடன் ரெட்ரோ ஸ்டைல் அமைப்பினை பெற்றிருக்கின்றது.

  • Chetak Blue 3202 STD -Rs. 1,15,018
  • Chetak Blue 3202 Tecpac -Rs. 1,20,018

(Ex-showroom)