Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

பஜாஜ் பிளாட்டினா H கியர் பைக் விற்பனைக்கு வெளியானது

By MR.Durai
Last updated: 4,June 2019
Share
SHARE

Bajaj Platina 110 H Gear

5 கியர்களை பெற்ற புதிய பஜாஜ் பிளாட்டினா H கியர் பைக்கினை கூடுதலான சிறப்புகளை உள்ளடக்கியதாக விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. பிளாட்டினா கம்ஃபோர்டெக் பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடலாக வந்துள்ளது.

முன்பாக 4 கியர்கள் மட்டும் வழங்கப்பட்ட நிலையில், ஹெச் கியர் மாடலில் இனி 5 கியர் மற்றும் முன்புறத்தில் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் வசதி வழங்கப்பட்டுள்ளது.

பஜாஜ் பிளாட்டினா H கியர்

8.4 bhp பவரை வெளிப்படுத்தும் 115 சிசி என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 9.1 Nm டார்க் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் வழங்கப்பட்டிருக்கும். முந்தைய மாடலில் 4 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருந்தது குறிப்பிடதக்கதாகும்.

கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் என்பதனை பஜாஜ் ஆட்டோ Anti-Skid Braking System என அழைக்கின்றது. ஆன்ட்டி ஸ்கிட் பிரேக்கிங் சிஸ்டம் பெற்ற மாடல் பிரேக் பிடிக்கும் சமயங்களில் இரண்டு பிரேக்குகள் அதாவது முன் மற்றும் பின் பிரேக்கினை இயக்கி சீரான பிரேக்கிங் திறனை வெளிப்படுத்துவதானால் வாகனம் நிலை தடுமாறுவதனை பெரிதும் தடுக்கின்றது.

பஜாஜ் பிளாட்டினா H கியர்

முதன்முறையாக 100 -125 சிசி வரையிலான சந்தையில் பல்வேறு நவீன வசதிகளை கொண்டதாக பஜாஜ் பிளாட்டினா ஹெச் கியர் வெளியிடப்பட உள்ளது. குறிப்பாக இந்த பைக்கில் இடம்பெற உள்ள செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் கியர் ஷிஃப்ட் இன்டிகேட்டர், தவறான கியர் செலக்‌ஷன் எச்சரிக்கை, குறைந்த பேட்டரி எச்சரிக்கை, சர்வீஸ் ரிமைண்டர், சர்வீஸ் இன்டிகேட்டர் போன்றவை வழங்கப்பட்டு சிறப்பான இருக்கை மற்றும் பின்புறத்தில் நைட்ராக்ஸ் சஸ்பென்ஷனை கொண்டதாக வரவுள்ளது. 3டி பிளாட்டினம் லோகோ, டீயூப்லெஸ் டயர், புதிய பாடி கிராபிக்ஸ் போன்றவை பெற்றுள்ளது.

இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ள H Gear என்பது “Highway Gear” என அழைக்கப்படுகின்றது. மூன்று விதமான நிறங்களில் இந்த பைக் கிடைக்க உள்ளது.

பஜாஜ் பிளாட்டினா H கியர் டிரம் பிரேக் மாடல் விலை ரூ. 53,376 மற்றும் டிஸ்க் பிரேக் மாடல் விலை ரூ. 55,373 என (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) நிர்ணயம் செய்யப்பட உள்ளது.

Bajaj Platina 110 H Gear

best 125cc bikes
125சிசி பைக் சந்தையில் ஹோண்டா, ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ்
ஹீரோவின் கிளாமர் X பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள்
ஹீரோ கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார்.?
இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸ் கண்ட்ரோல் ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 சிறப்புகள்
ஏதெரின் பட்ஜெட் விலை EL எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியானது
TAGGED:bajaj autoBajaj PlatinaBajaj Platina H Gear
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
tvs raider 125 iron man
TVS
2024 டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
ஓலா S1 X எலக்ட்ரிக்
Ola Electric
ஓலா S1 X, S1 X+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
2025 ஹோண்டா எஸ்பி 125
Honda Bikes
2025 ஹோண்டா SP125 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved