Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

பஜாஜ் பல்சர் 125 Vs ஹோண்டா எஸ்பி 125 ஒப்பீடு – எந்த பைக் பெஸ்ட் சாய்ஸ் ?

by automobiletamilan
April 18, 2020
in பைக் செய்திகள்

125 சிசி சந்தையில் பிரீமியம் விலை கொண்ட மாடல்களில் பஜாஜ் ஆட்டோவின் பல்சர் 125 பிஎஸ்-6 மற்றும் ஹோண்டாவின் எஸ்பி 125 என இரு பைக்குகளில் எந்த பைக்கில் கூடுதலான வசதிகள் மற்றும் எவ்வாறு ஒன்றை ஒன்று எதிர்கொள்கின்றது. எந்த பைக்கினை வாங்கலாம் ? என்பதனை அறிந்து கொள்ளலாம்.

பஜாஜின் இணையதளத்தில் டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் என இரண்டும் இப்போது பிஎஸ்6 என்ஜினில் வரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக ஸ்பிளிட் இருக்கை பெற்ற மாடலை பற்றி எந்த தகவலும் குறிப்பிடப்பவில்லை. இரண்டு மாடல்களும் 125சிசி என்ஜின் பெற்றதாக விளங்குகின்றது.

டிசைன்

பஜாஜ் ஆட்டோவின் மிகவும் சிறப்பான பல்சர் 150 மாடலின் வடிவத்தைப் பின்பற்றி அதே ஸ்டைலிங் அம்சங்களில் மிக நேர்த்தியாக விளங்குகின்ற பல்சர் 125 இளைய தலைமுறையினர் மத்தியில் மிக இயல்பாகவே வரவேற்ப்பினை பெறுகின்றது. அதேநேரத்தில் எஸ்பி 125 பைக்கும் ஸ்டைலிஷான டேங்க் உடன் மிக நேர்த்தியான முன்புற அமைப்பு போன்றவற்றை பெற்று இளையோர் மத்தியில் ஒரு வித ஈர்ப்பினை ஏற்படுத்துவதற்கு தவறவில்லை.

பல்சர் 125 நியான் மாடலை விட மிகவும் சிறப்பான பாடி கிராபிக்ஸ் மற்றும் நிறங்களை எஸ்பி 125 பெறுவது மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது.

என்ஜின்

இரண்டுமே 125சிசி என்ஜினை பெற்று இப்போது பிஎஸ-6 முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக பல்சர் 125 மாடல் எலக்ட்ரானிக் கார்புரேட்டர் முறையை பெற்றதாக அமைந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் எஸ்பி 125 பைக்கில் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் வழங்கப்பட்டிருப்பது நிச்சியமாக இந்த மாடலின் நம்பகத்தன்மையை மேலும் அதிகரிக்கின்றது.

125 சிசி சந்தையில் அதிகபட்ச பவரை வழங்கும் மாடலாக தொடர்ந்து பஜாஜ் பல்சர் 125 விளங்குகின்றது. இந்த மாடல் அதிகபட்சமாக 11.8hp பவரை வழங்குகின்றது. ஹோண்டாவின் எஸ்பி 125 பைக்கின் பவர் 10.72hp வெளிப்படுத்துகின்றது.

அடுத்ததாக டார்க்கினை பொறுத்தவரை எஸ்பி 125 மாடல் 10.9 என்எம், பஜாஜ் பல்சரின் 125 மாடல் 11 என்எம் வெளிப்படுத்துகின்றது. இரண்டு மாடல்களும் 5 வேக கியர்பாக்ஸ் அம்சத்தைப் பெற்றதாக விளங்குகின்றது.

பல்சர் 125 பைக்கின் மைலேஜ் சராசரியாக 55 கிமீ கிடைப்பதற்கும், எஸ்பி 125 மாடலின் மைலேஜ் லிட்டருக்கு சராசரியாக 58 கிமீ முதல் 60 கிமீ கிடைக்க வாய்ப்புள்ளது. எடைக் குறைந்த மாடலாக 118 கிலோ மட்டுமே எஸ்பி 125 கொண்டுள்ளது. அதே நேரத்தில் அதிகப்படியாக 140 கிலோ எடையை பல்சர் 125 பெற்றுள்ளது.

வசதிகள்

வசதிகளை பொறுத்தவரை ஒரே மாதிரியாக சஸ்பென்ஷன் அமைப்பில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், பின்புறத்தில் ஹைட்ராலிக் டைப் சஸ்பென்ஷனை பெறுகின்றது.

பிரேக்கிங் திறனில் இருபக்க டயர்களிலும் டிரம் பிரேக் கொண்டிருந்தாலும் பல்சரில் 170 மிமீ முன்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் 130 மிமீ (எஸ்பி125-ல் முன்புறத்திலும் 130மிமீ மட்டும்)வழங்கப்பட்டுள்ளது. டிஸ்க் பிரேக் ஆப்ஷனை பொறுத்தவரை இரு பைக்குகளும் 240 மிமீ டிஸ்க்கினை ஆப்ஷனலாக பெறுகின்றன.

இரு மாடல்களிலும் சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டுள்ளது.

பல்சர் 125 மாடலில் 17 அங்குல வீல் பெற்று முன்புறத்தில் 80/100 டயர் மற்றும் 100/90 டயரை பின்புறத்தில் கொண்டுள்ளது. SP125 மாடலில் 18 அங்குல வீல் பெற்று 80/100 டயரை இருபக்கத்திலும் கொண்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

எல்இடி ஹெட்லைட், முழு டிஜிட்டல் கருவி கிளஸ்ட்டரில் நிகழ்நேர எரிபொருள் செயல்திறன், பெட்ரோல் இருப்பிற்கான தூரம், கியர் நிலை காட்டி மற்றும் பலவற்றைக் கொண்டதாக எஸ்பி 125 விளங்குகின்றது.

ஆனால் பல்சர் 125-ல் ஹாலஜென் விளக்குகள், செமி டிஜிட்டல் கிளஸ்ட்டரை மட்டும் கொண்டுள்ளது.

விலை ஒப்பீடு

ஹோண்டா எஸ்பி 125 – ரூ.76,224 (டிரம்)

ஹோண்டா SP125 – ரூ.80,424 (டிஸ்க்)

பல்சர் 125 விலை  – ரூ.72,941 (டிரம்)

பல்சர் 125 விலை  – ரூ.77,062 (டிஸ்க்)

(எக்ஸ்ஷோரூம் சென்னை)

எந்த பைக் வாங்கலாம் ?

பல்சர் 125 பைக்கின் விலை குறைவாக அமைந்திருப்பது பலமாக இருந்தாலும், எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் கிளஸ்ட்டர், ஹோண்டாவின் தரம் போன்றவை எஸ்பி 125 பைக்கினை முன்னிலைக்கு கொண்டு வருகின்றன.

Tags: Bajaj Pulsar 125Honda SP125
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version