Automobile Tamilan

குறைந்த விலையில் கிடைக்கின்ற 6 ஏபிஎஸ் பைக்குகள்

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற பைக்குகளில் 125ccக்கு மேல் உள்ள மாடல்களுக்கு கட்டாயம் என்பதனால் குறைந்த விலையில் கிடைக்கின்ற ஏபிஎஸ் உள்ள பாதுகாப்பான பைக் மாடல்களின் என்ஜின், நுட்பவிபரங்கள் மற்றும் விலை பட்டியலை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

என்ஜின் சிசி 125க்கு மேல் இருந்தால் கட்டாயம் ஏபிஎஸ் கொடுக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ள நிலையில் அதற்கு குறைந்த சிசி உள்ள பைக்குகளில் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்படுகின்றது. ஆன்டி லாக்கிங் பிரேக் சிஸ்டம் என்பதன் பொருள் தமிழில் பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பாகும்.

ஏபிஎஸ் என்பது அவசரகால பிரேக்கிங் சமயத்தில் சக்கரங்கள் பூட்டிக்கொள்ளாமல் (லாக் ஆகாமல்) தடுக்க உதவும் அமைப்பாகும். இதன் மூலம் வாகனம் நிலை தடுமாறுவதனை தவிர்க்கலாம்.

பஜாஜ் பிளாட்டினா 110 ABS

இந்தியாவின் மிக குறைந்த விலையில் கிடைக்கின்ற ஒற்றை சேனல் ஏபிஎஸ் கொண்ட பிளாட்டினா 110 மாடலில் 240 மிமீ டிஸ்க் முன்புறத்திலும் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக் இடம்பெற்றுள்ளது.

பஜாஜின் பிளாட்டினா 110 மாடலில் இடம்பெற்றுள்ள 115.45cc DTS-i என்ஜின் அதிகபட்சமாக 8.6PS @ 7000rpm மற்றும் டார்க் 9.81Nm @ 5000rpmல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. பிளாட்டினா 110 ஏபிஎஸ் விலை ரூ.80,013 (எக்ஸ்ஷோரூம்) ஆகும்.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R

சமீபத்தில் ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகம் செய்த மிக ஸ்டைலிஷான ஸ்போர்ட்டிவ் தன்மையை வெளிப்படுத்தும் எக்ஸ்ட்ரீம் 125R பைக்கில் முன்புறத்தில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் 272 மீமி டிஸ்க் மற்றும் 130 மிமீ டிரம் பிரேக் உள்ளது.

Xtreme 125R பைக்கில் உள்ள 124.7cc ஏர் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8,250rpm-ல் 11.40hp பவர் மற்றும் 6,500rpm-ல் 10.5Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இந்த பைக்கில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. எக்ஸ்ட்ரீம் 125ஆர் ஏபிஎஸ் விலை ரூ.1,04,657 (எக்ஸ்ஷோரூம்) ஆகும்.

ஹோண்டா யூனிகார்ன் 160

160cc சந்தையில் கிடைக்கின்ற குறைந்த விலை ஹோண்டா யூனிகார்ன் பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸூடன் டிஸ்க் 240 மிமீ மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக் இடம்பெற்றுள்ளது.

யூனிகார்ன் 160 பைக்கில் 162.71cc என்ஜின் அதிகபட்சமாக 7,500rpm-ல் 12.73 bhp பவர், 14 NM டார்க் ஆனது 5500rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. யூனிகார்ன் 160 ஏபிஎஸ் விலை ரூ.1,08,400 (எக்ஸ்ஷோரூம்) ஆகும்.

பஜாஜ் பல்சர் 150

பஜாஜின் பல்சர் 150 பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஆனது ட்வீன் டிஸ்க், சிங்கிள் டிஸ்க் மற்றும் நியான் என மூன்று வேரியண்டிலும் கிடைக்கின்றது. ட்வீன் டிஸ்க்கில் முன்புறத்தில் 280 மிமீ மற்றும் 260 மிமீ பின்புறத்திலும், மற்ற இரண்டு வேரியண்டுகளிலும் 260 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் உள்ளது.

பல்சர் 150 பைக்கில் 149.5cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் 14PS @ 8500rpm மற்றும் 13.25Nm @ 6500 rpm வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் பெற்று விலை ரூ.1,09,152 முதல் ரூ.1,14,150 வரை (எக்ஸ்ஷோரூம்) உள்ளது.

யமஹா FZ Fi

குறைந்த விலை ஏபிஎஸ் கொண்ட யமஹா FZ Fi பைக்கில் 282 மிமீ டிஸ்க் மற்றும் 220 மிமீ டிஸ்க் பின்புறத்தில் பெற்று சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உள்ளது. 149cc ஏர்கூல்டு, 4-ஸ்ட்ரோக், SOHC, 2 வால்வு பெற்ற என்ஜின் அதிகபட்சமாக 12.4PS பவர் மற்றும் 13.3 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

யமஹா எஃப்இசட் எஃப்ஐ விலை ரூ.1,17,239 ஆகும்.

பஜாஜ் பல்சர் N150

பஜாஜ் ஆட்டோவின் மற்றொரு மாடல் இந்த பட்டியலில் பல்சர் N150

149.68 cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக பவர் 10.66 kW (14.5 PS) 8500 rpmல் மற்றும் 6,000rpm-ல் 13.5 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

பல்சர் N150 பைக்கின் விலை ரூ.1.18 லட்சம் முதல் ரூ.1.24 லட்சம் வரை கிடைக்கின்றது.

2024 Best Affordable ABS Bikes on road price

ABS Bikes Ex-showroom Price on-road Price
Platina 110 ABS ₹ 80,013 ₹ 96,742
Xtreme 125R ABS ₹ 1,04,657 ₹ 1,22,565
Honda Unicorn 160 ₹ 1,08,400 ₹ 1,28,543
Bajaj Pulsar 150 ₹ 1.09-1.15 லட்சம் ₹ 1.29-1.38 லட்சம்
Yamaha FZ-FI ₹ 1,17,239 ₹ 1,43,256
Bajaj Pulsar N150 ₹ 1.18 -₹ 1.24 லட்சம் ₹ 1.43-1.51 லட்சம்

(All price Tamil Nadu)

கொடுக்கப்பட்டுள்ள ஆன்-ரோடு விலை பட்டியல் தோராயமாதாகும்.

Exit mobile version