2020 ஆம் ஆண்டு விற்பனைக்கு வெளியான பைக்குகள்

இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியான இரு சக்கர வாகனங்களில் அதிக வரவேற்பினை பெற்ற புத்தம் புதிய பைக்குகள் உட்பட பல்வேறு மேம்படுத்தப்பட்ட மாடல்களும் சந்தைக்கு வந்துள்ளது.

1. ராயல் என்பீல்ட் மீட்டியோர் 350

முந்தைய தண்டர்பேர்டு வெற்றியை தொடர்ந்து மாற்றாக வெளியிடப்பட்டுள்ள புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக் பல்வேறு மாற்றங்களுடன் க்ரூஸர் சந்தையில் மிகவும் ஸ்டைலிஷான மற்றும் பல்வேறு வசதிகளுடன், முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட  ஏர்-ஆயில் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 20.2 பிஹெச்பி பவரையும், 27 என்எம் டார்க்கினை வெளிப்படுத்துகின்றது.

ஸ்மார்ட்போன் மூலமாக ப்ளூடூத் வாயிலாக இணைப்பினை ஏற்படுத்தி டர்ன் பை டர்ன் நேவிகேஷனை வழங்கும் டிரிப்பர் நேவிகேஷன் கொண்டதாக வந்துள்ளது.

ராயல் என்பீல்ட் மீட்டியோர் 350 பைக்கின் விலை ரூ.1.75 லட்சம் முதல் ரூ.1.90 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

2. ஹோண்டா ஹைனெஸ் சிபி 350

ரெட்ரோ ஸ்டைல் பெற்ற மாடலாக வந்துள்ள ஹைனெஸ் சிபி 350 மூலம் நேரடியாக ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு ஹோண்டா சவால் விடுத்துள்ளது. ஸ்டைலிங் அம்சங்கள் முதல் பெரும்பாலானவை கிளாசிக் 350-க்கு போட்டியாக அமைந்துள்ளது. 348.36சிசி லாங் ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 5500 ஆர்பிஎம் -ல் 20.8 பிஹெச்பி பவர் மற்றும் 3000 ஆர்பிஎம்-ல் 30 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது.

ப்ளூடூத் ஆதரவுடன் கூடிய டர்ன் பை டர்ன் நேவிகேஷன், ஸ்மார்ட்போன் வாய்ஸ் கனெக்ட்டிவிட்டி மற்றும் ஹோண்டா செலக்டபிள் டார்க் கன்ட்ரோல் ஆகியவை முக்கிய அம்சங்களாக இடம்பிடித்துள்ளது.

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 விலை ரூ.1.85 லட்சம் முதல் ரூ.1.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆகும்.

3. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160 ஆர்

150சிசி -க்கு கூடுதலான சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மற்றொரு வெற்றி மாடலாக எக்ஸ்ட்ரீம் 160 ஆர் அமைந்துள்ளது. அதிகபட்சமாக 8,500rpm-ல் 15.2 ஹெச்பி பவர் மற்றும் 6,500rpm-ல் 14 என்எம் டார்க் வெளிபடுத்தும். உள்ளது. குறிப்பாக அப்பாச்சி 160 பைக்கின் என்ஜின் ஆயில் கூல்டு பெற்றுள்ளது. இதில் 5 வேக கியர்பாக்ஸை பெற்றுள்ளது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160 ஆர் விலை ரூ.1.02 லட்சம் முதல் ரூ.1.05 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) வரை ஆகும்.

4. ஹோண்டா ஹார்னெட் 2.0

முந்தைய ஹார்னெட் 160 பைக்கின் மாற்றாக வந்த புதிய ஹார்னெட் 2.0 பைக்கில் 184சிசி ஒற்றை சிலிண்டர் ஏர்கூல்டு PGM-FI HET (Honda Eco Technology) இன்ஜின் 8500 RPM சுழற்சியில் 17.03 ஹெச்பி பவர் மற்றும் 6000 RPM சுழற்சியில் 16.1 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

ஹோண்டா ஹார்னெட் 2.0 மாடலின் விலை ரூ.1.30 லட்சம் முதல் ரூ.1.32 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

5. ஹஸ்க்வர்னா ஸ்வார்ட்பிலன் & விட்பிலன் 250

இந்தியாவில் ஹஸ்க்வரனா பைக் நிறுவனத்தின் முதல் மாடலாக ஸ்வார்ட்பிலன் 250 மற்றும் விட்பிலன் 250 என இரண்டும் வெளியிடப்பட்டுள்ளது. 248.8 சிசி, திரவ குளிரூட்டும் முறை பெற்ற ஒற்றை சிலிண்டர் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. 31 ஹெச்பி பவர் மற்றும் 24 என்எம் டார்க் வழங்குகின்றது.

ஸ்வார்ட்பிலன் 250 மற்றும் விட்பிலன் 250 என இரண்டும் ரூ.1.87 லட்சத்தில் கிடைக்கின்றது.

6. கேடிஎம் 390 அட்வென்ச்சர்

அட்வென்ச்சர் ஸ்டைல் வரிசையில் கேடிஎம் வெளியிட்டுள்ள 390 அட்வென்ச்சர் மாடலில் 9,500 ஆர்பிஎம் சுழற்சியில் 43 பிஎஸ் பவர், 7,250 ஆர்பிஎம் சுழற்சியில் 37 என்எம் டார்க்கையும் வழங்க வல்லதாகும். 6 வேக டிரான்ஸ்மிஷன் பெற உள்ளது.

கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் விலை ரூ.3.05 லட்சம்

7.கேடிஎம் 250 அட்வென்ச்சர்

குறைந்த விலையில் வெளியான மற்றொரு அட்வென்ச்சர் பைக் மாடலாக கேடிஎம் 250 அட்வென்ச்சர் விளங்குகின்றது.249.8 சிசி லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 30 பிஎச்பி பவரையும், 24 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கின்றது.

கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கின் விலை ரூ.2.48 லட்சம்.

8.பஜாஜ் டோமினார் 250

டோமினார் 400 பைக்கின் அடிப்படையில் சில வசதிகள் நீக்கப்பட்டு 249.8 சிசி லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 30 பிஎச்பி பவரையும், 24 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கின்றது.

பஜாஜ் டோமினார் 250 பைக் விலை ரூ.1.65 லட்சம்

Exit mobile version