ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 விற்பனைக்கு வெளியானது

0
royal enfield meteor 350 price

இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 க்ரூஸர் மோட்டார்சைக்கிள் விலை ரூ.1.75 லட்சம் முதல் ரூ. லட்சம் வரை (எக்ஸ்ஷோரும்) நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

முந்தைய ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு மற்றும் தண்டர்பேர்டு எக்ஸ் வெற்றியை தொடர்ந்து முற்றிலும் புதிய J பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள முதல் மாடலாக மீட்டியோர் 350 அறிமுகமாகியுள்ளது.

Google News

ராயல் என்ஃபீல்டு 350 மீட்டியோர் விலை எவ்வளவு ?

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 க்ரூஸர் பைக் விலை ரூ.1.75 லட்சம் முதல் ரூ.1.90 லட்சம்.(எக்ஸ்ஷோரூம்)

முன்பாக விற்பனை செய்யப்பட்ட தண்டர்பேர்டு எக்ஸ் தோற்ற உந்துதலை தழுவி வந்திருந்தாலும் முன்புறத்தில் ரெட்ரோ ஸ்டைலை வெளிப்படுத்துகின்ற வட்ட வடிவ ஹெட்லேம்பில் எல்இடி ரிங் கொடுக்கப்பட்டு ஹாலஜென் பல்பு வழங்கப்பட்டுள்ளது.

மீட்டியோர் 350 டிசைன்

பெட்ரோல் டேங்க் 20 லிட்டர் கொள்ளளவில் இருந்து 15 லிட்டராக குறைக்கப்பட்டு வழக்கமான டிசைனில் மிக நேர்த்தியான ராயல் என்ஃபீல்டு பேட்ஜ் க்ரோம் பூச்சில் டாப் சூப்பர் நோவா வேரியண்டில் வழங்கியுள்ளது. ஆரம்ப நிலை ஃபயர்பால் வேரியண்டில் ஸ்டிக்கரிங் முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.

டூயல் பாட் கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு ப்ளூடூத் ஆதரவில் இயங்கும் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வழங்கும் வகையில் டிரிப்பர் நேவிகேஷன் பெறுவதற்கு தனியான கிளஸ்ட்டரும், மற்ற ட்ரீப் மீட்டர், ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் உட்பட அனைத்து தகவல்களையும் பெற தனியாக அனலாக முறையில் கிளஸ்ட்டர் இணைக்கப்பட்டுள்ளது. டாப் வேரியண்டில் அதிகப்படியான க்ரோம் பாகங்கள் மற்றும் டூயல் டோன் என கவர்ந்திழுக்கின்றது. பேஸ் வேரியண்டில் சிங்கிள் டோன் பெற்ற கருமை நிற பாகங்களையும், ஸ்டெல்லர் வேரியண்டில் பாடி நிறத்திலான பாகங்கள் உள்ளன.

ஃபயர்பால் மஞ்சள், ஃபயர்பால் சிவப்பு, ஸ்டெல்லர் ரெட் மெட்டாலிக், ஸ்டெல்லர் பிளாக் மேட், ஸ்டெல்லர் ப்ளூ மெட்டாலிக், சூப்பர்நோவா பிரவுன் டூயல்-டோன் மற்றும் சூப்பர்நோவா ப்ளூ டூயல்-டோன் என மொத்தமாக 7 நிறங்கள் மீட்டியோரில் இடம்பெற உள்ளது.

மீட்டியோர் 350 வேரியண்ட் விபரம்

புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 வேரியண்ட் விபரம் ?

புதிய மீட்டியோர் 350 பைக்கில் ஃபயர்பால், ஸ்டெல்லர் மற்றும் சூப்பர் நோவா ஆகும்.

ஃபயர்பால், ஸ்டெல்லர், மற்றும் சூப்பர் நோவா (Fireball, Stellar & Supernova) என மூன்று விதமான வேரியண்டில் உள்ள வசதிகள் மற்றும் 7 விதமான நிறங்களின் விபரம் தற்போது இணையத்தில் கிடைக்கப் பெற்றுள்ளது. குறிப்பாக மீட்டியோரில் இடம்பெற உள்ள டிரிப்பர் நேவிகேஷன் ப்ளூடூத் ஆதரவுடன் செயல்படக்கூடிய டர்ன் பை டர்ன் நேவிகேஷனாக விளங்கும்.

royal enfield meteor 350 cluster

மீட்டியோர் 350 ஃபயர்பால் : தொடக்கநிலை ஃபயர்பால் வேரியண்டில் அடிப்படையான வசதிகளில் டிரிப்பர் நேவிகேஷன், ஒற்றை நிறம் பெற்ற டேங்க், கருமை நிற பாகங்கள், பாடி கிராபிக்ஸ் உடன் டிகெல்ஸ், கருமை நிற என்ஜின் உடன் மெசின்டு ஃபின்ஸ் பெற்றுள்ளது.

மீட்டியோர் 350 ஸ்டெல்லர் : நடுநிலையாக நிறுத்தப்பட உள்ள ஸ்டெல்லரில் டிரிப்பர் நேவிகேஷன், பாடி கலரில் மற்ற பாகங்கள், குரோம் பூச்சு பெற்ற புகைப்போக்கி, இஎஃப்ஐ கவர், ஹேண்டில் பார், பின்புற பேக் ரெஸ்ட், பிரீமியம் பேட்ஜிங் போன்றவற்றை கொண்டிருக்கும்.

மீட்டியோர் 350 சூப்பர் நோவா : டாப் மாடலாக விளங்க உள்ள சூப்பர்நோவாவில் இரு வண்ண நிறங்கள், டிரிப்பர் நேவிகேஷன், மெசின்டு வீல்ஸ், வீண்ட் ஸ்கீரின், குரோம் இன்டிகேட்டர்ஸ், பிரீமியம் இருக்கைகள் வழங்கப்பட்டிருக்கும்.

புதிய டபுள் கார்டில் ஃபிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள க்ரூஸர் ரக மீட்டியோரின் 350 மாடலில் இடம்பெற்றுள்ள புத்தம் புதிய லாங் ஸ்ட்ரோக் ஏர்-ஆயில் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 20.2 பிஹெச்பி பவரையும், 27 என்எம் டார்க்கினை வெளிப்படுத்துகின்றது.

Royal Enfield Meteor 350
Variant Price*
Fireball INR 1,75,825
Stellar INR 1,81,342
Supernova INR 1,90,536

(எக்ஸ்ஷோரூம் சென்னை)

royal enfield meteor 350 fireball red

royal enfield meteor 350 bike

Web title : Royal Enfield Meteor 350 launched at Rs 1.76 lakh