க்ரூஸர் ஸ்டைலை பெற்ற ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக்கில் அரோரா என்ற பெயரில் மூன்று நிறங்களை ரூ.2.20 லட்சம் விலையில் அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே ஃபயர்பால், ஸ்டெல்லார், மற்றும் சூப்பர்நோவா ஆகியவை விற்பனையில் உள்ளது.
மீட்டியோர் 350 ஃபயர்பால் ரூ.2.06 லட்சம் முதல் துவங்குகின்ற நிலையில் டாப் வேரியண்ட் சூப்பர்நோவா ரூ.2.30 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) கிடைக்கின்றது.
Royal Enfield Meteor 350
டபுள் கார்டில் ஃபிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள க்ரூஸர் ரக மீட்டியோர் 350 மாடலில் இடம்பெற்றுள்ள ஜே சீரிஸ் லாங் ஸ்ட்ரோக் ஏர்-ஆயில் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 20.2 bhp பவரையும், 27 Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.
ஏற்கனவே, 13க்கு மேற்பட்ட நிறங்களை பெற்றிருக்கின்ற மீட்டியோர் 350 மாடலில் அரோரா என்ற பெயரில் கருப்பு, நீலம் மற்றும் பச்சை என மூன்று நிறங்களை கொண்டுள்ளது. பல்வேறு இடங்களில் க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்ட பாகங்கள், ஸ்போக் வீல், டிரிப்பர் நேவிகேஷன், எல்இடி ஹெட்லேம்ப் கொண்டதாக அமைந்துள்ளது.
முன்பை விட புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக்கின் விலை ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
- Aurora Black, Green, Blue – ₹.2.20 லட்சம்
- Fireball-₹ 2.06 லட்சம்
- Stellar ₹.2.16 லட்சம்
- Super nova ₹.2.30 லட்சம்