பிளாக்ஸ்மித் b3

சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் பிளாக்ஸ்மித் எலக்ட்ரிக் நிறுவனத்தின், பி3 (B3) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 120 கிமீ வேகத்தில் அதிகபட்ச தொலைவாக 120 கிமீ பயணிக்கும் திறன் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பாக பி2 என்ற க்ரூஸர் ஸ்டைல் மாடலை வெளியிட்டிருந்தது.

கடந்த 2002 ஆம் ஆண்டு தனது அறுமுக ராஜேந்திர பாபு இனை தலைவராக கொண்டு தொடங்கப்பட்ட பிளாக்ஸ்மித் நிறுவனத்தின் டெக்னாலாஜி பிரிவின் தலைவராக A.R. கார்த்திகேயன் உள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் முன்மாதிரி எலக்ட்ரிக் பைக் தயாரிப்பிற்கான நுட்பத்தை உருவாக்கிய இந்நிறுவனம், தற்போது நான்காம் தலைமுறை நுட்பத்தை கொண்டு சோதனை செய்து வருகின்றது. 2020 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் விற்பனைக்கு வெளியிட உள்ளது.

பிளாக்ஸ்மித் பி2 க்ரூஸர் பைக் மற்றும் பி3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என இரு மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. மேலும் பேட்டரியை ஸ்வாப் செய்வதற்காக பிளாக்ஸ்மித் எக்ஸ்சேஞ்ச் நிலையங்களை உருவாக்கவும் உள்ளது. இந்த மையங்கள் மிக சிறப்பான பாதுகாப்பு நடைமுறையுடன் தீ தடுப்பு நுட்பத்துடன் கொண்டிருக்கும் என்பதால், பெட்ரோல் நிலையங்களில் மிக பாதுகாப்பு நிறுவ இயலும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக காப்புரிமை கோரி இந்நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

பிளாக்ஸ்மித் மின்சார பைக்

பிளாக்ஸ்மித் பி3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

2020 ஆம் ஆண்டில் வரவுள்ள பிளாக்ஸ்மித் பி3 மாடல் ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது, நீண்ட வீல்பேஸ் மற்றும் அதிகபட்ச நீளம் கொண்டதாகும். மேலும் நடைமுறை வடிவமைப்புடன், முழு குடும்பத்திற்கும் ஏற்றது, உலகளவில் தற்போதைய ஸ்கூட்டர் வடிவமைப்புகளுக்கு ஏற்ப ஒரு வடிவமைப்பை விட மிக சிறப்பான முறையில் தட்டையான அமைப்பினை வெளிப்படுத்தும் இருக்கை பெற்றுள்ளது.

பி3 மாடலில் குழந்தைகளுக்கான சிறப்பு வசதி மற்றும் சீட் பெல்ட்கள் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. எல்இடி மற்றும் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி டெயில் விளக்கு. மேலும், ஸ்கூட்டர் முன் மற்றும் பின்புற அலாய் வீல்களுடன், முன்புறத்தில் டெலிஸ்கபிக் சஸ்பென்ஷனை பெற்றதாக வரவுள்ளது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டருடன் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி அம்சங்களை பெற வாய்ப்புகள் உள்ளது.

பிளாக்ஸ்மித் பி 3 மாடல் முழுமையான சார்ஜிங் செய்ய 4 மணி நேரம் எடுத்துக் கொள்வதுடன் 5 கிலோவாட் ஹவர் மோட்டார் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 120 கிமீ பயணிக்கும் வரம்புடன் அதிக பவரை வழங்கும் அடர்த்தி கொண்ட NMC பேட்டரி பேக்  உடன் திறன்மிகுந்த ப்ளூடூத் பிஎம்எஸ் மற்றும் உயர் திறன் கொண்ட ஏசி கன்ட்ரோலருடன் வரவுள்ளது. பி 3 அதிகபட்சமாக 14.5 கிலோவாட் (19.44 பிஹெச்பி) சக்தி மற்றும் உச்ச முறுக்கு விசை 96 என்எம் ஆகும். பிளாக்ஸ்மித் பி3 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஒரு செயற்கை நுண்ணறிவு அமைப்புடன் இயங்கும் ஜி.பி.எஸ், அதே போல் திருட்டை தடுப்பதற்கான அலாரத்துடன் வரவுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் நான்கு விதமான ப்ரீசெட் வேகத்தை நிர்ணயம் செய்யலாம். அவை மணிக்கு 60 கிமீ, 80 கிமீ, 100 கிமீ மற்றும் 120 கிமீ ஆகும்.

இந்தியாவின் 700 க்கு மேற்பட்ட மாவட்டங்களில் துவங்க உள்ளது. தற்போது 6 விண்ணப்பங்கள் பெற்றுள்ளன. அவற்றில் மெக்சிகோ மற்றும் ஸ்பெயின் நாடுகளிலும் டீலர்களை திறப்பதற்கான முயற்சியை இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

பிளாக்ஸ்மித்