பிஎஸ்6 என்ஜினை பெற்ற புதிய ஹீரோ ஸ்ப்ளெண்டர் அறிமுகத்தை தொடர்ந்து அடுத்து சில வாரங்களில் 125சிசி ஹீரோ கிளாமர், ஸ்ப்ளெண்டர், HF டீலக்ஸ் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 போன்றவற்றில் பிஎஸ்6 என்ஜின் பொருத்தப்பட உள்ளது.
சமீபத்தில் ஹீரோ கிளாமர் பைக்கின் சாலை சோதனை ஓட்ட பங்கள் வெளியான நிலையில், விற்பனையில் உள்ள மாடலை விட பல்வேறு விதமான ஸ்டைலிங் மேம்பாடுகள் மற்றும் பிஎஸ்6 என்ஜின் பெற்று விற்பனையில் கிடைக்கின்ற மாடலை விட சற்று குறைவான பவரை வெளிப்படுத்துவதுடன் அதிகப்படியான மைலேஜ் வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
மேம்பட்ட மாடலாக வரவுள்ள கிளாமர் சமீபத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட பிஎஸ்6 ஹோண்டா எஸ்பி125 பைக்கிற்கு கடுமையான சவாலினை ஏற்படுத்தும் வசதிகளை பெறுவதுடன் எல்இடி ஹெட்லைட் பெறும் வாய்ப்புகள் உள்ளது.
ஹீரோ ஸ்ப்ளெண்டர் மற்றும் HF டீலக்ஸ் பைக்குகளிலும் பல மாற்றங்களுடன், மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரில் பிஎஸ்6 என்ஜின் பெற்றிருக்கும். ஹீரோ நிறுவனம் முன்னணி மாடல்களின் பிஎஸ்4 உற்பத்தியை நிறுத்திவிட்டதாக கூறப்படும் நிலையில், வரும் பிப்ரவரி 2020க்கு முன்பாக அனைத்து ஹீரோ பைக்குகளும் பாரத் ஸ்டேஜ் 6 நடைமுறைக்கு மாற்றப்படும் என்பதனால் பைக்குகளின் விலை 10-15 சதவீதம் உயரக்கூடும்.
மேலும் படிங்க – பிஎஸ்6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் சிறப்புகள்