மிகவும் பிரசத்தி பெற்ற ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்ப்ளெண்டர் பிளஸ் (splendor+) பைக்கில் பிஎஸ்6 என்ஜினுடன் விற்பனைக்கு ரூபாய் 59,600 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய பிஎஸ்4 என்ஜினை விட ரூ.10,000 வரை கூடுதலாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
100 சிசி கார்புரேட்டர் என்ஜின் பெற்ற மாடலாக இருந்து வந்த நிலையில், இனி ஹீரோவின் புதிய 10 சென்சார்கள் கொண்ட நுட்பத்துடன் (XSens technology) எஃப்.ஐ என்ஜின் பெற்று 8000 ஆர்.பி.எம்-ல் 7.91 பிஹெச்பி பவருடன், 6,000 ஆர்.பி.எம்-ல் 8.05 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. முன்பாக விற்பனை செய்யப்பட்ட மாடலை விட 1.3 பிஹெச்பி வரை பவர் குறைந்துள்ளது. இதன் காரணமாக முன்பை விட சிறப்பான மைலேஜ் வழங்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
விற்பனையில் உள்ள மாடலின் வடிவமைப்பில் எந்த மாற்றங்களும் இல்லை. ஆனால் ஸ்டைலிங்கான பாடி கிராபிக்ஸ் மற்றும் புதுப்பிக்கப்பட்ட நிறங்களை பெற்றுள்ளது. மற்றபடி முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பருடன் வந்துள்ளது. இரு பக்க டயர்களிலும் டிரம் பிரேக் இணைக்கப்பட்டு சிறப்பான பிரேக்கிங் திறனை வெளிப்படுத்த ஐ.பி.எஸ் அமைப்பினை கொண்டிருக்கின்றது.
bs6 hero splendor plus bike price list
KICK START DRUM BRAKE ALLOY WHEEL | INR 59,600 |
SELF START DRUM BRAKE ALLOY WHEEL | INR 61,900 |
SELF START DRUM BRAKE ALLOY WHEEL – i3s | INR 63,110 |
ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…
கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…
கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…
டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…