Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் பிஎஸ்6 விற்பனைக்கு வெளியானது

by automobiletamilan
February 14, 2020
in பைக் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

bs6 hero splendor plus

மிகவும் பிரசத்தி பெற்ற ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்ப்ளெண்டர் பிளஸ் (splendor+) பைக்கில் பிஎஸ்6 என்ஜினுடன் விற்பனைக்கு ரூபாய்  59,600 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய பிஎஸ்4 என்ஜினை விட ரூ.10,000 வரை கூடுதலாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

100 சிசி கார்புரேட்டர் என்ஜின் பெற்ற மாடலாக இருந்து வந்த நிலையில், இனி ஹீரோவின் புதிய 10 சென்சார்கள் கொண்ட நுட்பத்துடன் (XSens technology) எஃப்.ஐ என்ஜின் பெற்று 8000 ஆர்.பி.எம்-ல் 7.91 பிஹெச்பி பவருடன், 6,000 ஆர்.பி.எம்-ல் 8.05 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. முன்பாக விற்பனை செய்யப்பட்ட மாடலை விட 1.3 பிஹெச்பி வரை பவர் குறைந்துள்ளது. இதன் காரணமாக முன்பை விட சிறப்பான மைலேஜ் வழங்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

விற்பனையில் உள்ள மாடலின் வடிவமைப்பில் எந்த மாற்றங்களும் இல்லை. ஆனால் ஸ்டைலிங்கான பாடி கிராபிக்ஸ் மற்றும் புதுப்பிக்கப்பட்ட நிறங்களை பெற்றுள்ளது. மற்றபடி முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பருடன் வந்துள்ளது. இரு பக்க டயர்களிலும் டிரம் பிரேக் இணைக்கப்பட்டு சிறப்பான பிரேக்கிங் திறனை வெளிப்படுத்த ஐ.பி.எஸ் அமைப்பினை கொண்டிருக்கின்றது.

bs6 hero splendor plus bike price list

KICK START DRUM BRAKE ALLOY WHEELINR 59,600
SELF START DRUM BRAKE ALLOY WHEELINR 61,900
SELF START DRUM BRAKE ALLOY WHEEL – i3sINR 63,110
Tags: Hero Splendorஹீரோ ஸ்ப்ளெண்டர்
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan