Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

இந்தியாவில் விரைவில் வெளியாக உள்ள டூகாட்டி ஸ்கிராம்ப்ளர் 1100

by automobiletamilan
August 2, 2018
in பைக் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

2017 EICMA மோட்டர் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது டூகாட்டி ஸ்கிராம்ப்ளர் 1100 இந்தியாவில் வெளியான உள்ளது. ரகசியமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இந்த மோட்டார் சைக்கிள்கள் டீலர்களிடம் விரைவில் வந்தடையும் என்று தெரிவிக்கிறது. அதனால், அடுத்த சில மாதங்களில் இந்த பைக் வெளிவந்தால் அது ஆச்சரியபடுத்தும் வகையில் இருக்காது.

சர்வதேச அளவில் ஸ்டாண்டர்ட், ஸ்பெஷல் மற்றும் ஸ்போர்ட் என மூன்று வகைகளில் இந்த பைக்குகள் வெளியாக உள்ளது. இருந்தபோதும் சிறப்பு வகை பைக்குகள் இந்தாண்டின் இறுதியில் விற்பனைக்கு வர உள்ளது. ஒவ்வொரு வகைகளும் வேறுபாட்ட வாடிக்கையாளர்களை டார்க்கெட் செய்தே தயாரிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு வகைகள், அதிக வாடிக்கையாளர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்னென்றால், இந்த வகைகள் தனித்துவமிக்க கஸ்டம் கிரே கலர், புரோஷ்டு-வடிவில் சுவிங்கிரம் மற்றும் மாற்றி அமைக்கப்கூடிய முன்புற போரக்ஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது. இது கோல்டன் அனோடைஷ்டு ஸ்லீவ்ஸ் ஆகயவை வாடிக்கையாளர்களை கவரும் அம்சங்களாக உள்ளது. இவர் மட்டுமின்றி பிளாக்-அவுட் ஸ்போக்ஸ்டு வீல்கள், குரோம் எக்ஸ்ஹாஸ்ட்ஸ் மற்றும் முன்புற/ பின்புறங்களில் அலுமினியம் மாட்கார்ட்டுகளும் பொருத்தப்பட்டுள்ளது.

அதிக செயல்திறனை விரும்பு வாடிக்கையாளர்களை ஸ்போர்ட் வகை பைக்குகள் மிகவும் கவரும். பெயரில் மட்டுமல்லாது, இந்த பைக்கின் செயல்திறனிலும் உயர்தரமான செயல்பாடுகளை கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி இரண்டு புறங்களிலும் உயர் செயல்திறன் கொண்ட ஹோளின்ஸ் சஸ்பென்சன் மற்றும் மெஷினினால் உருவாக்கப்பட்ட ஸ்போஸ் உடன் கூடிய அலுமினியம் வீல்களையும் கொண்டுள்ளது. இத்துடன் டேப்பர்டு ஹாண்டில்பார்கள் மற்றும் ஒழுங்காக வடிவமைக்கப்பட்ட சீட்களும் இடம் பெற்றுள்ளது. மேலும் சிலிக் வைப்பார் பிளாக் கலர் மற்றும் பெட்ரோல் டேங்கின் இரு புறங்களிலும் மஞ்சள் நிறங்கள் மற்றும் டேங்கின் நடுப்பகுதில் டுயல் மஞ்சள் நிற ஸ்டிரிப்கள் மற்றும் மட்கார்டுகள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மூன்று பைக்குகளும் ஒரே மாதிரியான் வசதிகளை கொண்டுள்ளது. புதிய ரிம்மை சுற்றி LED ரிங்களுடன் ஹெட்லைட், இவை DRLs போன்று செயல்படும், மேலும் இதில் LED வால்பகுதி லேம்ப்-ம் இடம் பெறும். இந்த கருவிகள் முழுவதுமாக டிஜிட்டல் முறையில் வடிவமைக்கப்பட்டு 1970-களில் வெளியான உண்மையான ஸ்கிராம்ப்ளர் போன்று தோற்றத்தை அளிக்கிறது. இதில் ஐந்து லெவல் டிரக்க்சன் கண்ட்ரோல், ஆக்டிவ், டுரிங் மற்றும் சிட்டி என மூன்று ரைடிங் மோடுகள், இண்டீரியல் மெசர்மென்ட் யூனிட் மற்றும் கோநேரிங் ABS ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்கிராம்ப்ளர் 1100 வகை பைக்குள் இரண்டு வால்வ் ஏர்/ஆயில் கூள்டு 1079cc L-டுவின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் மான்ஸ்டர் 1100 EVO-வில் இருந்து பெறப்பட்டது. இந்த மோட்டார் 86 PS ஆற்றலுடன் 7500rpm மற்றும் 88.4Nm டார்க்யூவில் 4750rpm-ல் இயங்கும்.

முன்னணி டூகாட்டி ஸ்கிராம்ப்ளர் வரிசையில், ஸ்கிராம்ப்ளர் 1100 வகை பைக்குள் 11 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் விலையில் கிடைக்கும் (எக்ஸ் ஷோரூம் விலை) இது டிரையம்ப்
ட்ரூக்சன் R பைக்குகளை போட்டியாக இருக்கும். இந்த வகை பைக்குகளின் விலை 11.92 லட்ச ரூபாயாகும் (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்).

Tags: DucatiIndiaScrambler 1100இந்தியாவில்டூகாட்டிஸ்கிராம்ப்ளர் 1100
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan

Go to mobile version