சீனாவின் எவோக் மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளரின் புதிய மாடலான 6061 க்ரூஸர் ரக எலக்ட்ரிக் பைக் தனது பெர்ஃபாமென்ஸ் மூலம் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த பைக்கின் உச்சபட்ச வேகம் மணிக்கு 230 கிமீ ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.
டூகாட்டி டியாவெல் பைக்கின் தோற்ற அமைபின் உந்துலை பெற்றுள்ள எவோக் 6061 பைக்கின் தோற்றம் மிக கவர்ச்சிகரமாக வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட் பெற்று மிக நேர்த்தியான முறையில் டிசைன் பேனல்களை கொண்டு கவர்ச்சிகரமாக அமைந்துள்ளது.
எவோக் 6061 பைக்கில் 120 கிலோ வாட் லிக்யூடூ கூல்டு எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டு 24.8 கிலோ வாட் ஹவர் லிக்யூடு கூல்டு பேட்டரி பேக்கினை கொண்டுள்ள இந்த மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 230 கிமீ ஆகவும், நெடுஞ்சாலை பயணித்தின் போது சிங்கிள் சார்ஜில் 265 கிமீ பயணமும், அதே நேரத்தில் நகர பயன்பாட்டில் அதிகபட்சமாக 470 கிமீ வரை பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசி விரைவு சார்ஜிங் ஆப்ஷனை பெற்ற இந்த பைக்கி வெறும் 15 நிமிடங்களில் 80 சதவீத சார்ஜ் பெரும் திறனுடன் கூடிய 125kW ஃபாஸ்ட் சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது சர்வதேச அளவில் பெர்ஃபாமென்ஸ் சந்தையில் பிரசத்தி பெற்று விளங்குகின்ற ஹார்லி டேவிட்சன் லைவ் வயர், எனெர்ஜிக்கா பைக்குகள் மற்றும் ஜீரோ S/F போன்றவற்றை எதிர்கொள்ளுகின்ற எவோக் 6061 விலை $24,995 (தோரயமாக ரூ. 18.73 லட்சம்). அமெரிக்காவில் 2021 ஆம் ஆண்டின் துவக்கத்தில் வெளியாக உள்ளது. இந்தியவில் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை.