296cc லிக்யூடு கூல்டு V-twin இன்ஜின் பெற்ற ஹார்லி-டேவிட்சன் நிறுவனத்தின் சீன கூட்டணி நிறுவனமான Qianjiang (பெனெல்லி குழுமம்) தயாரிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள மாடலுக்கு SRV300 ஸ்போர்ட்ஸ்டெர் என பெயரிடப்பட்டுள்ளது.
குயான்ஜாங் நிறுவனம் முன்பாக ஹார்லியின் 338ஆர் மாடலை வடிவமைத்திருந்தது. தொடர்ந்து அடுத்து வடிவமைக்கப்பட்டுள்ள புதிய 296 சிசி லிக்யூடு கூல்டு V-twin இன்ஜின் பவர் அதிகபட்சமாக 30hp வரை வெளிப்படுத்துவது உறுதியாகியுள்ளது.
விற்பனையில் கிடைக்கின்ற பாபர் ரக ஸ்டைல் ஹார்லி-டேவிட்சன் ஐயன் 883 வடிவமைப்பினை பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ள புதிய மாடல் சீன சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. முன்புறத்தில் 16 அங்குல வீல் மற்றும் பின்புறத்தில் 15 அங்குல வீல், ஏபிஎஸ் மற்றும் பைக்கின் எடை 163 கிலோ ஆக அமைந்திருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
QJMotor SRV300 பைக்கின் அதிகபட்ச வேகம் மணிக்கு 129 கிமீ ஆகும்.
சீன சந்தையில் வெளியிடப்பட உள்ள நிலையில், இந்தியாவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் ஹார்லி இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ள நிலையில் ஆனால் எப்பொழுது விற்பனைக்கு வெளியிடப்படும் என்ற தகவலும் இல்லை.