இந்திய சந்தையிலிருந்து விற்பனை மற்றும் உற்பத்தியை முழுமையாக நிறுத்துவதாக ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உயர் ரக பிரீமியம் அமெரிக்கா மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளரான ஹார்லி இந்தியாவில் கடந்த 2009 முதல் செயல்பட்டு வந்தது.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பால் மோட்டார் துறை விற்பனை சரிவடைந்துள்ள நிலையில் ஹார்லி நிறுவனம் தனது REWire எதிர்கால திட்டங்கள் மற்றும் குறைந்த வருவாய் தரும் நாடுகளில் விலகிக் கொள்ள முடிவெடுத்திருந்தது. அந்த வரிசையில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.
ஹார்லி-டேவிட்சன் இந்தியா கடந்த நிதியாண்டில் 2,500 க்கும் குறைவான எண்ணிக்கையில் மட்டும் விற்பனை செய்திருந்தது. இந்நிறுவனத்தின் மோசமான சர்வதேச சந்தைகளில் ஒன்றாகும். இதன் காரணமாக 70 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். இந்நிறுவனம் ஹரியானாவின் பவலில் ஒரு அசெம்பளி ஆலையை கொண்டுள்ளது.
இந்திய சந்தையிலிருந்து ஹார்லி வெளியேறினாலும் தொடர்ந்து டீலர்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்ட பைக்குகளுக்கு சர்வீஸ் வழங்கப்படும் என உறுதிப்படுத்தியுள்ளது.
இந்திய சந்தையில் கடந்த 3 முதல் 4 ஆண்டுகளில் வெளியேறி ஆட்டோமொபைல் நிறுவனங்ளின் பட்டியலில் இப்போது ஹார்லி டேவிட்சன் நிறுவனமும் இணைந்துள்ளது. முன்பாக ஃபியட், செவர்லே, சாங்யாங், யூஎம் மோட்டார்சைக்கிள், ஸ்கேனியா மற்றும் மேன் ஆகும்.
2021-2025 ஆம் ஆண்டு வரை தனது வர்த்தகத்தை Rewire எனப்படும் சீர்திருத்த முறையில் செயல்பட உள்ளது. இதன் காரணமாக அதீத வருவாய் தரக்கூடிய சந்தையில் மட்டும் கவனத்தை செலுத்த உள்ளது.