இந்தியாவின் முன்னணி ஹீரோ எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், FAME II மானியம் குறைக்கப்பட்ட போதிலும், பேட்டரி மின்சார ஸ்கூட்டர் வாங்குவதனை ஊக்குவிப்பதில் அர்ப்பணிப்புடன் உள்ளோம் மற்றும் அதிகப்படியான செலவு பற்றிய தவறான எண்ணங்களை நீக்குவதற்காக இந்த முடிவை மேற்கொண்டுள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
FAME-II மானியம் ஜூன் 1 முதல் நடைமுறையில் உள்ள FAME-II மானியம் kWh ஒன்றுக்கு ரூ. 15,000க்கு பதிலாக இனி ஒரு kWh பேட்டரி திறனுக்கு ரூ.10,000 ஆக குறைக்கப்பட உள்ளது. நடைமுறையில் உள்ள 40 சதவீத மானியத்துடன் ஒப்பிடும்போது, E2W இன் முன்னாள் தொழிற்சாலை செலவில் (ரூ. 1.50 லட்சத்தை தாண்டக்கூடாது) இனி 15 சதவீதமாக மட்டுமே இருக்கும். எனவே, விலை உயர்ந்த எல்க்ட்ரிக் 2 வீலர் தயாரிப்பாளர்கள் விலை வரை உயரக்கூடும்.
ஹீரோ எலக்ட்ரிக் அறிக்கையில் இ-ஸ்கூட்டர் வரிசையின் விலைகளை மாற்றாமல் இருப்பதன் மூலம், கூடுதல் செலவுகள் இல்லாமல் பேட்டரி மின்சார இருசக்கர வாகனங்களுக்கு மாறுவதற்கு அதிக எண்ணிக்கையிலான நுகர்வோரை ஊக்குவிக்கும் என இந்நிறுவனம் நம்புகிறது.
Phased Manufacturing Process திட்டத்தின் கீழ் FAME மானியம் பெற உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உதிரிபாகங்கள் பயன்படுத்தப்பட்டதாக போலியான தகவலை வழங்கிய காரணத்துக்காக ஹீரோ எலக்ட்ரிக் மற்றும் ஓகினாவா ஆட்டோடெக் இரு மானியம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்திடம் இருந்து 133 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…
ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…
கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…
ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…
துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…