பிஎஸ்-6 இன்ஜின் பொருத்தப்பட்டு 110சிசி சந்தையில் மற்றொரு மாடலாக ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஸ்கூட்டர் விற்பனைக்கு ரூ.60,950 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. அலாய் வீல் கொண்ட வேரியண்ட் ரூ.62,450 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
போட்டியாளர்களான பிரசத்தி பெற்ற ஹோண்டா ஆக்டிவா 6ஜி மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் மாடலை எதிர்கொள்ளுகின்ற மேஸ்ட்ரோ எட்ஜ் 110 மாடலில் எஃப்ஐ பெற்ற
110.9cc ஒற்றை சிலிண்டர் பிஎஸ்-6 இன்ஜின் அதிகபட்சமாக 7500 RPM-ல் 8 hp பவர் மற்றும் 5500 RPM-ல் 8.75 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. முந்தைய மாடலை விட மிக சிறப்பான எரிபொருள் சிக்கனம் மற்றும் செயல்திறனை வழங்கும் என ஹீரோ குறிப்பிட்டுள்ளது.
இருபக்க டயர்களிலும் டிரம் பிரேக் உடன் ஐபிஎஸ் பெற்று சிறப்பான பிரேக்கிங் திறனுடன், முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்கு மற்றும் பின்புறத்தில் யூனிட் ஸ்விங் ஸ்பீரிங் லோடேட் ஹைட்ராலிக் டேம்ப்பர் கொண்டுள்ளது. ஹாலஜென் ஹெட்லைட் உடன் பின்புறத்தில் எல்இடி டெயில் லைட், செமி டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 BS6 வந்துள்ளது.
டிரம் பிரேக் அலாய் வீல் FI VX – ரூ. 64,400
அலாய் வீல் FI – ரூ. 65,900